JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 24

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை

அத்தியாயம் 24

சில வாரங்களுக்கு முன்.

காமத்திபுரா.

மும்பையின் மையப்பகுதியில், சென்ட்ரல் மற்றும் கிராண்ட் ரோடு ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இருக்கும் காமத்திபுரா மும்பையின் அடையாளங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றது.

‘ஹார்ன்பி வெல்லார்ட்’ என்பது பம்பாயின் ஏழு தீவுகளையும் ஒன்றிணைத்து, ஆழமான இயற்கை துறைமுகத்துடன் ஒரே தீவாக ஒரு தரைப்பாதையை அமைப்பதற்கான திட்டமாகும்.

இந்தத் திட்டம் 1782 - இல் கவர்னர் வில்லியம் ஹார்ன்பியால் தொடங்கப்பட்டது, பிறகு அனைத்து தீவுகளும் 1838 - இல் இணைக்கப்பட்டன.

நகரத்தின் முதல் பெரிய சிவில் இன்ஜினியரிங் வேலைகளில் ஒன்றான இது, 1784 - இல் நிறைவடைந்தவுடன் மஹாலக்ஷ்மி மற்றும் காமத்திபுராவின் தாழ்வான சதுப்பு நிலங்களை மக்கள் வசிப்பதற்கான பகுதியாகத் திறந்துவிட்டதில் அது தீவுகளின் புவியியலையே மாற்றியது.

இது நடந்து சரியாகப் பத்து வருடங்கள் கழித்து, மராட்டிய இராணுவம் ஹைதராபாத் நிஜாமை தோற்கடித்த சூழ்நிலையில் தெலுங்கானாவில் இருந்து பல கைவினைஞர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் மும்பைக்கு [பம்பாய்] இடம் பெயர்ந்தனர்.

அவர்கள் 'ஹார்ன்பி வெல்லார்ட்' கட்டுமான திட்டத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் குடியேறினர்.

இந்தத் தொழிலாளர்களே காமதிகள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் வசித்த பகுதி காமத்திபுரா என்று அழைக்கப்பட்டது.

ஆனால் நம்மவர்கள் பலருக்கு காமத்திபுரா என்றால் முதலில் நியாபகம் வருவது, பாலியல் தொழில் செய்பவர்களின் இருப்பிடம் என்பது தான். ஏனெனில் மும்பையின் காமத்திபுரா பழமை வாய்ந்த சிகப்பு விளக்கு பகுதி மட்டுமல்ல, இது ஆசியாவின் மிகப் பெரிய சிகப்பு விளக்கு பகுதி என்றும் அழைப்படுகின்றது.

அதற்குக் காரணம், 18 ஆம் நூற்றாண்டு காலகட்டத்தில் கப்பல்துறைகளின் பணியாளர்கள் மற்றும் உணவகங்களை நடத்தி வந்த சீன சமூகத்தினரின் தாயகமாக இருந்து வந்த காமத்திபுராவினுள், 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஐரோப்பா, ஜப்பான் மற்றும் சீனாவிலிருந்து ஏராளமான பெண்கள் கொண்டு வரப்பட்டு, ராணுவ வீரர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் சேவை செய்யும் விலைமாதர்களாகப் பணி செய்ததில், சிகப்பு விளக்குப் பகுதியாக மாறியிருக்கின்றது.

அந்தக் காமத்திபுரா, மும்பையின் இருள் உலகத் தலைவர்கள் அவ்வப்பொழுது [gang leaders] கூடி கலந்தாலோசிக்கும் இடமாகவும் உருபெற்றிருக்கின்றது.

***********************

அன்று, காமத்திபுராவின் ஒரு பகுதியில் காக்கி உடையணிந்த காவலதிகாரிகள் பலர் குழுமியிருக்க, அவர்களின் நடுவில் நின்று கொண்டிருந்த ஷிவ நந்தனின் முகம் உணர்ச்சிகளை வடித்தது போல் கடுமையாகி போயிருந்ததில், அவனது அந்தத் தோற்றம் அவனைக் கூட்டத்தில் இருந்து தனித்துக் காட்டியது.

"எவ்வளவு பெரிய மாடல்? சினிமா படங்களில் கூட நடிச்சிட்டு இருந்தாங்கன்னு சொல்றாங்க. ரெண்டு வாரங்களுக்கு முன்னாடி எங்கேயோ வெளிநாடு போறதா சொன்னாங்களாம், அதற்குப் பிறகு அவங்கக்கிட்ட இருந்து எந்தத் தகவலும் வரலையாம். வெளியத் தெரியாதளவில் மறைமுகமா தேடிட்டு இருந்திருக்காங்க. கடைசியில இப்போ இப்படிக் கொலை செய்யப்பட்டு நடுரோட்டில கிடக்குறாங்களே.”

ஷிவாவின் காதுகளில் விழுந்து கொண்டிருந்த அப்பெண்ணைப் பற்றிய வார்த்தைகள் இதயத்தில் பெரும் கீறல்களை உண்டாக்கியதில் அவனது பளபளக்கும் கண்களில் கவலையைக் கொணர்ந்தது, ஆயினும் அது வெளிப்பட்டவுடனே மறைந்தும் போனது.

"இருபது வயசுதான் ஆகுதுன்னு சொல்றாங்க. எப்படித்தான் இப்படிக் கொலை செய்து குப்பை மாதிரி தூக்கிப் போட மனசு வருதோ. அதுவும் பாவம் உடம்பை எப்படிச் சிதைச்சிருக்கானுங்க படுபாவிங்க. ரொம்ப அழகான பொண்ணு, அதோட தலையெழுத்தைப் பாருங்க..."

அங்கலாய்த்த காவலதிகாரி ஒருவரைக் கண்டு தலையசைத்துத் தன்னிடம் வருமாறு பணித்த ஷிவா அவரது செவிகளில் ஏதோ கிசுகிசுக்க, அவரின் முகம் அச்சத்தினால் வெளிரிப் போகத் துவங்கியது.

"சார், இங்க அப்பப்போ கேங் லீடர்ஸ் வருவது நமக்குத் தெரியும், ஆனால் மிர்சா கேங்?"

"ஏன் மிர்சா கேங்க் எல்லாம் இது மாதிரி க்ரைமில் ஈடுபட மாட்டாங்களா, என்ன?"

"சார், அது வந்து.."

"இழுக்காதீங்க, நான் சொன்னதைச் செய்யுங்க. முக்கியமா கலானி மிர்சா, அவனைப் பற்றி என்கொயர் பண்ணுங்க.."

கர்ஜிக்கும் குரலில் அதட்டியவனாய் அவர் செய்ய வேண்டிய வேலைகளைக் கட்டளைகளாய் இடத் துவங்க, அதுவரை இறந்துக் கிடந்த இளம்பெண்ணைப் பற்றிப் பரிதாபப்பட்டுக் கொண்டிருந்த அந்தக் காவதிகாரிக்கு இனி தன் நிலைமை என்னவாகப் போகின்றதோ என்ற பீதியில் உதறல் எடுக்க ஆரம்பித்தது.

அவர்கள் இருவரையும் கவனித்தவாறே நின்று கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவருக்கோ நெற்றியில் வியர்க்கத் துவங்கியது.

மெள்ள ஷிவாவை நோக்கி நடந்தவர் அவனை விட்டு சில அடிகள் இடைவெளித் தூரத்திலேயே நின்றவாறே, "சார்..” என்றார்.

“யெஸ்?”

“சார்..”

“சார் சாருன்னே சொல்லிட்டு இருக்கப் போறீங்களா? அல்லது விஷயத்துக்கு வரப் போறீங்களா?”

அவ்வளவு தான், அவனது காட்டுக்கத்தலில் திடுக்கிட்டு போனதில், தொண்டையில் அடைத்துக் கொண்டிருந்த எச்சிலை விழுங்கியவராக மடமடவெனப் பேச ஆரம்பித்தார்.

“ரொம்ப ஃபேமஸான மாடல் சார் இவங்க. இவங்களை யாரு கொண்டு வந்து அடைச்சு வச்சிருந்ததுன்னு கேட்டால், எங்களுக்குத் தெரியலைன்னு அப்பட்டமா பொய் சொல்றானுங்க. இவ்வளவு புகழ்பெற்ற ஒரு பெண்ணை எப்படி யாருக்கும் தெரியாமல் கொண்டு வந்து அடைச்சு வைக்க முடியும்? இவ்வளவு பேர் நடமாடிட்டு இருக்கிற இடத்தில ஒருத்தனுக்குமே தெரியாமல் இப்படி ஒரு அநியாயம் எப்படிச் சார் நடக்க முடியும்? நம்புற மாதிரியே இல்லையே.

அதனால் கண்டிப்பா இங்க இருக்கிறவங்களில் ஒருத்தனுக்கு இவங்க எப்படி இங்க வந்தாங்கன்னு தெரிஞ்சிருக்கணும். இவங்களைக் கொலை செய்தவன் இங்க இருக்கிற pimp-களில் [தரகன்] ஒருவனா இருக்கலாம். அல்லது யாராவது கஸ்டமரா கூட இருக்கலாம். அந்த ஆங்கிளில் தேடாமல், மிர்சா கேங்க் ஈடுபட்டிருப்பாங்கன்னு நீங்க சொல்றது கொஞ்சம் குழப்பமா இருக்கு சார். இது அவங்களுக்குத் தெரிஞ்சிடுச்சுன்னா?"

"தெரிஞ்சிடுச்சின்னா?”

"அதுக்கில்லை சார். இந்தக் கொலையில் கலானி மிர்சா சம்பந்தப் பட்டிருப்பாருன்னு சொன்னா யாருமே நம்ப மாட்டாங்க சார்.."

"அதாவது நீங்க நம்ப மாட்டேன்னு சொல்றீங்க, அப்படித்தானே?"

ஷிவாவின் சுட்டெரிக்கும் பார்வையையும், அழுத்தமாய் அவன் கேட்ட தொனியையும் கண்டு வாயை மூடிக் கொண்டார் அந்தச் சப்-இன்ஸ்பெக்டர்.

"நான் சொல்றதை மட்டும் செய்யுங்க, போதும்.” என்றவாறே அவ்விடத்தை விட்டு நகர எத்தனித்தவன் சற்று நின்று அவரைத் திரும்பிப் பார்த்தவனாய்,

“முதல்ல கலானி மாதிரி மாஃபியா கூட்டத்து க்ரிமினல்ஸ்களுக்கு எல்லாம் அவர் இவருன்னு மரியாதைக் கொடுக்கிறதை நிறுத்துங்க.” என்றவனாய் தனது ஆரஞ்சு நிற ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீமில் ஏறியதுமே அதனைச் சீறிக் கிளப்ப, அவனது வாகனம் மறைந்ததும் தான் அங்கு இருந்த அனைத்து காவலர்களுக்கும் அது வரை அடைத்திருந்த ஸ்வாசம் ஆசுவாசத்தோடு வெளிவந்தது.

“என்னய்யா இவ்வளவு கோபம் வருது இவருக்கு?”

அருகில் நின்றிருந்த மற்றொரு காவலரைப் பார்த்து அந்தச் சப்-இன்ஸ்பெக்டர் கேட்க,

“சார்.. என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் ஷிவ நந்தன் சாருன்னா இந்த நாடு முழுக்கத் தெரியும். அப்படிப்பட்டவர் இந்தக் கலானி மிர்சா மாதிரி எத்தனை மாஃபியா ஆளுங்களையும், கிரிமினல்ஸையும் போட்டுத் தள்ளி இருப்பாரு. அவரிடம் போய் அந்தக் கலானியை அவர் இவருன்னு ரொம்ப மரியாதையா சொல்றீங்களே. அதான் வெடிச்சிட்டு போறாரு..” என்றார்.

ஷிவாவின் வாகனம் சென்ற பாதையையே சில கணங்கள் பார்த்த அந்தச் சப்-இன்ஸ்பெக்டர்,

“இவர் மும்பைக்கு மாற்றலாகி வராருன்னு தெரிஞ்சப்பவே மும்பை ஃபோலீஸ் ஃபோர்ஸே அரண்டுப் போச்சு. இதுல கேபினெட் மினிஸ்டர் ஆர்ய விக்னேஷ், தேஸாய் கம்பெனிஸின் சிஇஓ வருண் தேஸாய்னு பெரிய பெரிய தலைகளை எல்லாம் அரெஸ்ட் பண்ணி ஆட்டம் காட்டிட்டு இருக்கார். இந்த நேரத்துல இப்போ அந்த மிர்சா கேங்க் மேல கை வைக்கப் போற மாதிரியும் தெரியுது. எவன் எவன் தலை உருளப் போகுதோ, எத்தனை என்கவுண்டர் நடக்கப் போகுதோ?” என்று புலம்பியவராக அந்தக் காவலரின் புறம் திரும்பினார்.

அவரின் புலம்பலைக் கண்டு சிறிதே புன்னகைத்த மற்ற காவலர்களைக் கண்டு அவருக்கு எரிச்சல் வந்தது.

“இப்போ எதுக்கு இந்தச் சிரிப்பு? உங்களுக்கும் இருக்கு. இவர் மும்பையை விட்டு போற வரைக்கும் இப்படித் தான் நடக்கப் போகுது. நாம் எல்லாம் ஒவ்வொரு நாளும் இது மாதிரி ஏதாவது பெரிய தலைகளின் சிக்கல்களில் மாட்டிட்டு முழிச்சிட்டே இருக்கப் போறோம். சரி சரி, போங்க. அவரு திரும்பி வரதுக்குள்ளே ஏதாவது துப்பு துலங்குதான்னு பாருங்க.”

வெடுக்கென்று கூறிய சப்-இன்ஸ்பெக்டர் ஷிவாவின் கட்டளைகள் படி சில காவலர்களையும் அழைத்துக் கொண்டு அந்த இளம்பெண்ணின் கொலையைப் பற்றிய விசாரணையைத் துவக்க, அங்குத் தன் குர்கா எக்ஸ்ட்ரீமில் பறந்து கொண்டிருந்த ஷிவாவின் புத்தி முழுவதையும் ஒரு சில கேள்விகளே ஆட்கொண்டிருந்தன.

ஒரு பெண்ணைக் கடத்தி வந்து இவ்வாறு அடைத்து வைத்து பல நாட்கள் சித்திரவதை செய்த பிறகு அவளைக் கொலையும் செய்யும் மனித மிருகங்களை என்ன செய்வது?

அவள் மாடலாக இருந்தால் என்ன, சினிமா நடிகையாக இருந்தால் என்ன? அவளும் ஒரு பெண் தானே?

இக்கேள்விகள் தோன்றியக் கணம் அவனது நினைவுகளில் துர்காவின் முகம் தோன்றியது.

வருணால் கடத்தப்பட்ட அன்று அவள் தன்னைப் பார்த்து கதறியது நியாபகத்திற்கு வர, ஏற்கனவே ஸ்டியரிங்கை அழுத்திப் பிடித்திருந்த அவனது கரங்களில் மேலும் இறுக்கம் தோன்றியதில் நரம்புகள் தெறித்துவிடும் அளவிற்குப் புடைக்கத் துவங்கின.

'இது மாதிரி துர்காவிற்கும் ஏதாவது நடந்திருந்தால்? இந்தப் பெண்ணைப் போன்ற நிலை வருணால் துர்காவிற்கு ஏற்பட்டிருந்தால்? ஏதாவது கேஸில் அந்த வருணை சிக்க வைத்து அடிச்சு இழுத்துட்டு வந்து செல்லில் [prison cell] அடைக்கலாமுன்னு பார்த்தால் முடியலையே. சே!'

தன்னைத் தானே சலித்துக் கொண்டவனாய் காரை செலுத்தும் வேகத்தை அதிகப்படுத்த, குறுந்தகவல் வந்ததாகச் சிறு ஒலி எழுப்பி அவனது கவனத்தை ஈர்த்தது அலைபேசி.

தகவல் அனுப்பியிருந்தது அஷோக்.

“மும்பை ரீச் பண்ணிட்டேன் ஷிவா?”

“நான் என் ஆஃபிஸுக்கு தான் வந்து கொண்டிருக்கேன். அங்க மீட் பண்ணலாம்.”

"ஷ்யுர்.” என்று முடித்துக் கொண்ட அஷோக் சில நிமிடங்கள் கழித்து மீண்டும் ஒரு குறுந்தகவல் அனுப்பினான்.

“லேட்டஸ்ட் நியூஸ் கேள்விப்பட்டியா ஷிவா?”

விடியற்காலையிலேயே அப்பெண்ணின் கொலையைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டதும் தற்பொழுதைய காவல்துறை தலைமை இயக்குனரின் [Director general of police (DGP)] தனிப்பட்ட வேண்டுகோளிற்கு இணங்க காமத்திபுராவிற்கு வந்திருந்தான் ஷிவா.

அவ்விடத்தில் காலடி வைத்ததில் இருந்து அவனது கவனம் வேறு எங்கும் செல்லாதிருக்க, இதனில் அன்று மிகப்பிரபலமான ஊடகங்கள், இணையத்தளங்கள், தொலைக்காட்சிகள் அனைத்திலும் அலறிக் கொண்டிருந்த செய்தியை அவன் அறிந்திருக்கவில்லை.

ஒரு கை ஸ்டியரிங்கில் இருக்க, மறு கையால் பதில் தகவல் அனுப்பினான்.

"என்ன லேட்டஸ்ட் நியூஸ் அஷோக்? சஹானா பாக்ஷியோட கொலை தானே?"

"இல்லை.. வருண் சிதாரா திருமணம் பற்றிய நியூஸை சொல்றேன் ஷிவா."

செய்தியைப் படித்ததும் சடாரென்று வாகனத்தை ஒடித்துத் திருப்பியவன் சாலையின் ஓரத்தில் புழுதிகள் பறக்க பிரேக்கை அழுத்தி நிறுத்தினான்.

அவனது ஆவேசத்திற்கு முதல் காரணம், காலையில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த, கற்பழித்துச் சிதைக்கப்பட்டிருந்த அந்த இளம்பெண்ணின் நிலை ஏனோ மீண்டும் மீண்டும் துர்காவை நினைவுப்படுத்தியது.

எவ்வளவு நாட்கள் அந்த வருண் இன்னும் அவளை அடைத்து வைத்திருப்பான்? உயிரோடு இருக்கின்றாளா இல்லையா? பாலியல் வண்கொடுமைகள் போன்று அவளை எவரேனும் சித்திரவதை செய்து கொண்டிருக்கின்றார்களா?

அந்த இரு மாதங்களும் ஒவ்வொரு நிமிடமும் இதை நினைத்துத் துடித்துப் போயிருந்தான் அவன்.

அப்படித் தங்களின் குடும்பைத்தையே வேதனையில் ஆழ்த்திய வருணின் நின்று போன திருமணம் மீண்டும் நல்ல முறையில் நடைபெறப் போகின்றது என்பதே அவனது ஆக்ரோஷத்தின் முதல் காரணம்

இரண்டாவது காரணம், இந்தியாவின் பணக்காரர்களின் பட்டியலில் குறிப்பிட்ட இடம் வகிக்கும் வருண், பெரும் தொழிலதிபன் என்ற போர்வைக்கு அடியில் அநியாயங்களைச் செய்து கொண்டிருப்பவனது செல்வாக்கும் அந்தஸ்தும் அவனை ஒன்றுமே செய்ய முடியாதளவிற்குத் தன் கரங்களைக் கட்டிப் போட்டிருக்கின்றதே.

நிமிடங்கள் நேரம் அவ்விடத்திலேயே வாகனத்தை நிறுத்தியிருந்தவன் கண்களை மூடி சட்டையின் காலரை இழுத்தவாறே வலப்பக்கமாகக் கழுத்தை சாய்த்துத் தன்னை ஆசுவாசப்படுத்திய பிறகு காரை எடுத்தவன் தன் அலுவலகத்தை நோக்கி விரைந்தான்.

Shiva Nandhan IPS

Senior Superintendent of Police

ஷிவாவின் நாமம் பொறிக்கப்பட்டிருந்த அறைக்கதவைத் தட்டிவிட்டு உள்ளே நுழைந்த அஷோக்கிற்கு நண்பனின் தோற்றம் வியப்பை அளித்தது.

வழி நெடுக்கிலும் வருணைப் பற்றியும் மாடல் அழகி சஹானா பாக்ஷியைப் பற்றியும் நினைத்துக் கொண்டு வந்திருந்த ஷிவாவிற்கு அடுத்து நியாபகத்தில் வந்த முகம் சிதாரா.

எவ்வாறு அவள் வருணை மணமுடிக்கச் சம்மதித்தாள்?

தன் அறையில் அமர்ந்திருந்த ஷிவா இப்பொழுது உழன்று கொண்டிருந்தது இக்கேள்வியில் தான்.

அவனது மனக்கண்களின் முன் விமான விபத்து நேர்ந்த அன்றைய இரவில், சிதாராவிற்கும் தனக்கும் இடையே நடந்த உரையாடல்கள் படம் போல் ஒளிர்ந்து கொண்டிருந்தது.

‘எனக்குச் சட்டவிரோதமா செயல்படுறவங்களைப் பிடிக்காது. வாழ்கையில் எதுலேயும் ஒரு ethic [நெறிமுறை] இருக்கணும்னு நினைக்கிறவ நான். வருணை அன்னைக்கு நீங்க அரெஸ்ட் பண்ணியதால் மட்டுமே எங்க கல்யாணம் நின்னுப் போனதுன்னு நீங்க நினைக்கிறீங்க. எனிவேய்ஸ், எங்க நிச்சயதார்த்தம் நின்ற அன்னைக்கு உண்மையில் நான் சந்தோஷம் தான் பட்டேன். ஏன்னா, அவருக்கும் எனக்கும் கல்யாணமுன்னு பேசி முடிச்சு சில மாசங்களிலேயே எங்க கல்யாணத்தை ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி நிறுத்தலாமான்னு நானே சில சமயங்களில் யோச்சிச்சு இருக்கேன். ஆனால் நிச்சயதார்த்தம் வரை போயிடுச்சு, இதுக்கு மேல என்ன செய்யறதுன்னு நான் நினைச்சிட்டு இருந்தப்ப தான் நீங்க வந்தீங்க. அதனால் எனக்கு லாபம் தான்."

அன்று அவ்வாறு கூறியவள் எப்படி மறுபடியும் வருணைத் திருமணம் செய்து கொள்வதற்குச் சம்மதித்தாள்?

அன்றைய இரவில் கட்சிரோலி காட்டிற்குள் தன்னுடன் அவ்வளவு நெருக்கமாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவள் இரு மாதங்களுக்குள்ளாகவே அவனேயே திருமணம் செய்வதற்குச் சம்மதம் சொல்லிவிட்டாளே.

இதெல்லாம் அரசியல்வாதிகளின் குடும்பங்களில் சகஜமோ?

மனம் முழுவதுமே கேள்விகளாலும் சந்தேகங்களாலும் மூழ்கியிருக்க, தன் எதிரே போடப்பட்டிருந்த நாற்காலியில் தன் முகத்தையே பார்த்தவாறே அமர்ந்திருந்த அஷோக்கைக் கவனிக்க மறந்திருந்தான்.

புருவங்கள் இரண்டும் ஒன்றோடு இணைந்திருப்பது போல் சுருங்கியிருக்க, இருக்கையில் நன்றாகச் சாய்ந்து அமர்ந்தவனாய் வலது கரத்தை கைப்பிடியில் ஊன்றி நெற்றியை அழுந்த தேய்ந்து கொண்டிருந்த ஷிவாவின் தோரணை அஷோக்கிற்குச் சிறு புன்னகையைக் கொடுத்தது.

"என்ன ஷிவா, தீவிர யோசனையில் இருக்கிற மாதிரி தெரியுது? ஆனால் எனக்கென்னவோ அந்த யோசனை சஹானா பாக்ஷியின் கொலையைப் பற்றியதா தெரியலை.."

அவனது வினாவில் மெள்ள ஏறிட்டு நோக்கிய ஷிவா, ஆழ பெருமூச்செடுத்தவனாய் நிமிர்ந்து அமர்ந்தவாறே, "அதெல்லாம் ஒண்ணுமில்லை.. சரி, நீ எப்போ வந்த?" என்றான்.

"அப்படிக் கேளு.. நான் வந்ததே தெரியலை, இதுல வாய் தான் ஒண்ணுமில்லைன்னு சொல்லுது.. முகம் வேற இல்ல சொல்லுது?"

"என்ன சொல்லுது என் முகம்?"

"காலையில் இருந்து ஷோஷியல் மீடியாஸ், நியூஸ் சேனல்ஸ் எல்லாத்திலேயும் அந்த வருண் சிதாரா கல்யாணத்தைப் பற்றிப் பேசி பேசியே போரடிக்கிறாங்க. நம்ம நாட்டுல மக்களுக்குச் சொல்றதுக்கு வேற முக்கியமான விஷயமே இல்லைங்கிற மாதிரி இருக்கு இந்த மீடியாஸ் ஒரு தனி மனிதனுடைய கல்யாணத்தை விளம்பரம் பண்றதைப் பார்த்தால். இதுல சஹானா பாக்ஷியோட மரணம் கூடப் பெருசா பேசப் படலையோன்னு உனக்குத் தோணுதுன்னு உன் முகம் சொல்லுது."

"ம்ப்ச், அஷோக்.. நீ வேற."

"என்ன நான் வேற? ஆனாலும் நீ நினைக்கிறது சரிதான் ஷிவா. வருண் தனி மனிதனில்லையே. அவனுக்குப் பின்னால் இந்த நாடே இருக்குதுன்னு சொல்லலாமே.."

"அதனால் தான அஷோக் அவன்தான் துர்கா கடத்தப்பட்டதற்குக் காரணமும்னு தெரிஞ்சும் நம்மால் ஒரு ஆக்ஷனும் எடுக்க முடியலை."

"அதுக்கு அவன் மட்டும் தான் காரணமா ஷிவா?"

நண்பனின் கேள்விக்கான அர்த்தம் ஷிவாவிற்கும் புரிந்து தான் இருந்தது.

எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் வருணின் மீது எந்த வித வழக்கும் பதிய வேண்டாம் என்று துர்கா பிடிவாதமாக மறுத்துவிட்டாள்.

அதே போல் ஏற்கனவே மகளின் வாழ்க்கை உறவினர்களின் மத்தியில் அவ்வப்பொழுது அவலாக மெல்லப்பட்டிருக்க, இதனில் வழக்கு, விசாரணை, நீதிமன்றம் என்று வந்தால் அவளுடைய மொத்த வாழ்க்கையுமே காட்சிப்பொருளாக மாறிவிடும் என்று ஸ்ரீமதியும் ஷிவாவிடம் கெஞ்சி மன்றாடி வேண்டிக் கொண்டார்.

ஆக, அவனால் வருணை நோக்கி ஒரு அடி கூட நேரடியாக எடுத்து வைக்க முடியவில்லை.

என்னத்தான் காவல் துறையில் பெரிய பதவி வகித்தாலும் தொழில் ஜாம்பவான்களுக்கும் பெரும் அரசியல்வாதிகளுக்கும் கட்டுப்பட்டுத்தானே எதையுமே செய்ய முடிகின்றது.

சில வேளைகளில் இவர்களுக்கு இடையில் பாக்கு வெட்டிக்கு மத்தியில் சிக்கியது போல் காவல்துறை அல்லாட வேண்டியும் இருக்கிறது.

ஏற்கனவே வருணின் மீது தீராத கோபமும் அவன் மீது விரல் கூட வைக்க முடியவில்லையே என்ற ஆங்காரமும் இருக்க, இதனில் திடுமென வலம் வந்து கொண்டிருக்கும் அவனது திருமணப் பேச்சு எரிச்சலில் ஷிவாவை மூழ்கடித்திருந்தது.

"சரி, அவனை விடு. இப்போ இந்தச் சஹானா விஷயத்துக்கு வருவோம். அவ கொலைக்குக் காரணம் யாருன்னு ஏதாவது தெரிஞ்சுதா?"

"மிர்சா பிரதர்ஸ்.."

"மிர்சா பிரதர்ஸா? அவனுங்களுக்கும் சஹானாவிற்கும் இடையில் என்ன தொடர்பு இருக்க முடியும் ஷிவா?"

"மிர்சா பிரதர்ஸுக்கும் சஹானாவுக்கும் இடையில் நேரடித் தொடர்பு இருக்கான்னு எனக்குத் தெரியலை. ஆனால் இவங்களுக்கு இடையில் வேற ஒருத்தன் இருக்கான். அவன் தான் இந்தக் கொலைக்கு முக்கியக் காரணமா இருக்கலாம்னு நினைக்கிறேன்."

"யார் அது?"

"ஆர்யன்."

ஷிவாவின் பதிலில் திகைப்பில் விலுக்கென்று நிமிர்ந்து அமர்ந்தான் அஷோக்.

"என்ன ஷாக் அஷோக்?"

"சஹானாவுடன் ஆர்யனுக்குத் தொடர்பு இருந்ததுன்னு தெரியும். ஆனால் அவங்களுக்கு இடையில் ஏதோ பிரச்சனை இருக்கிறதாவும், அதனால் ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டாங்கன்னு மீடியாஸில் சொல்லிட்டு இருந்தாங்களே. அதுக்காக ஆர்யன் ஒருத்தியை கொலை செய்ற அளவுக்குப் போவானா, என்ன? "

"அது எனக்குத் தெரியலை அஷோக், ஆனால் என் சந்தேகப்படி ஆர்யனைப் பற்றிய ஏதோ ஒரு இரகசியம் அவளுக்குத் தெரிய வந்திருக்கு. அது அவள் மூலமா மிர்சா பிரதர்ஸுக்கு போய் இருக்கு. அதை மறைக்கத்தான் இந்தக் கொலையே நடந்திருக்கு."

"பட் இதை எப்படி ப்ரூவ் பண்ணப் போற?"

"பண்ணணும் அஷோக். ஆனால் முதலில் இந்த கொலைக்கான காரணத்தை கண்டுப்பிடிக்கணும். ஆனால் என் உள்ளுணர்வு இந்தக் கொலையில் மறைமுகமாகவாவது ஆர்யனுக்கும் பங்கு இருக்கும்னு அடிச்சு சொல்லுது. அதுவும் இல்லாமல் சஹானாவை கொலை செய்யறதுக்குக் கொலையாளித் தேர்ந்தெடுத்த இடம் காமத்திபுரா. இங்க மும்பையில் அவளைக் கொலை செய்ய இடமே இல்லையா, என்ன? ஏன் அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தாங்க? காமத்திபுராவில் ஏன் அவளை அடைச்சி வச்சிருந்தாங்க. அங்க விசாரிச்சவரை சஹானாவை அங்கத்தான் அடைச்சு வச்சிருந்திருக்கணும்னு சொல்றாங்க, பட் அது உண்மையான்னு தெரியலை. இல்லை அவளை வேற எங்கேயாவது மறைச்சு வச்சிருந்து கொலை செய்யறதுக்கு மட்டும் அவளை இங்க கூட்டிட்டு வந்தானுங்களா, அதுவும் தெரியலை. இந்தக் கேஸில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருக்கு. எல்லாத்தையும் கண்டுப்பிடிக்கணும் அஷோக்."

"ஒகே, இதுவரை உன்னுடைய உள்ளுணர்வு சொன்னது எல்லாமே சரியாத் தான் இருந்திருக்கு. ஆனால் இன்னொரு விஷயமும் என்னைக் குடைஞ்சிட்டே இருக்கு."

என்ன என்பது போல் ஒற்றைப் புருவத்தை உயர்த்தி ஷிவா பார்க்க,

"ஏன் நம்ம புது டிஜிபி சஹானாவோட கேஸை நீ தான் டீல் செய்யணும்னு ஸ்பெஷல் ரிக்வெஸ்ட் பண்ணிருக்கார்." என்றான்.

அதற்குப் பதிலேதும் கூறாது தெரியவில்லை என்பது போல் தலையை மட்டும் இடம் வலமாக அசைத்த ஷிவா தோளைக் குலுக்க, "இன்னும் ஒரே ஒரு கேள்வி.." என்ற நண்பனை வியப்பாய் பார்த்தான்.

"இப்பத் தான் மும்பைக்கு வந்திருக்க. அதுக்குள்ள எத்தனை கேள்விகள்டா?"

"இது உன் பெர்ஸ்னல், அதான்.."

"கேட்க வந்துட்ட இல்ல, கேட்டுடு.."

"துர்கா இன்னும் வருண் மேல் கேஸ் எதுவும் கொடுக்க வேணாம்னு சொல்லிட்டு இருக்கான்னு சொன்னல்ல. அது ஏன்?"

அவனது வினாவில் அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்த ஷிவா அறையின் ஒரு பக்கமாய் இருந்த ஜன்னலின் அருகில் சென்றவன் சில நிமிடங்கள் சாலையின் மீது வெறித்த பார்வையைச் செலுத்தத் துவங்கினான்.

"சாரி ஷிவா. நான் லிமிட்டைத் தாண்டிட்டேன்னு நினைக்கிறேன்."

ஆனாலும் ஷிவாவிடம் இருந்து பதில் வரவில்லை.

அமர்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழப்போன அஷோக்கின் சத்தத்தில் அவனைத் திரும்பிப் பார்த்த ஷிவா,

"எனக்குத் துர்கா விஷயத்தில் இன்னும் நிறையக் குழப்பங்களும் சந்தேகங்களும் இருக்கு அஷோக். அவ திரும்பி வந்த அன்னைக்கு அவள் உடம்பு முழுசும் எவ்வளவு காயங்கள் இருந்ததுன்னு உனக்குச் சொல்லிருக்கேன். ஆனால் அது எப்படி வந்தது, வருண் அவளை எதுவும் செஞ்சானான்னு கேட்டால் ஒரு வார்த்தைக்கூடச் சொல்ல மாட்டேங்குறா. எப்பக் கேட்டாலும் வருண் என்னை எதுவும் செய்யலை, என் கிட்ட கூட வரலைன்னு இதே பாட்டு தான். ஆனால் எப்படி அவ்வளவு காயங்கள் பட்டுச்சுன்னு கேட்டால் அதுக்கு அவளிடம் சரியான விளக்கம் இல்லை.

ஆனால் நிச்சயம் அந்தக் காயங்கள் அன்னைக்குத் தான் ஏற்பட்டிருக்கு. அவ்வளவு ஃப்ரெஷா இருந்தது. கேட்டால், பகலில் முடியாதுன்னு நானே அவங்க என்னை அடைச்சு வச்சிருந்த இடத்தில் இருந்து நைட் தப்பிக்க முயற்சிப் பண்ணினேன். இருட்டுக்குள்ள எனக்கு எதுவும் தெரியலை. அதான் மரங்களில் இடிச்சிக்கிட்டதால் ஏற்பட்ட காயங்கள் தான் இவைன்னு சொல்றா. ஆனால் எனக்குத் தெரிஞ்ச துர்கா இப்படி ராத்திரி நேரத்துல காட்டுக்குள்ள தனியா தப்பிச்சு ஓடுறவ இல்லை. இதுல அவளுடைய காயங்களுக்கு மருந்தும் போட்டிருக்காங்க. ஆனால் அவங்களே அவளைத் திரும்பவும் அனுப்பி வைச்சிருக்காங்க.

அந்த வருண் ஏன் அவளை அவ்வளவு நாள் வச்சிருந்தான்? ஏன் அவனே அவளைத் திருப்பி அனுப்பினான்? இதில் நான் அவளுக்கு எடுத்துக் கொடுத்த கல்யாணப் புடவையிலேயே அவளை அனுப்பி வைச்சிருக்கான், ஆனால் அது ஏன்?

இது மாதிரி எத்தனையோ கேள்விகள், ஆனால் அவளை நான் பார்த்ததும் இது மாதிரிக் கேள்விகள் கேட்டு அவளைக் கஷ்டப்படுத்திடுவேனோ, இல்லை எப்படியாவது அவளைக் கன்வின்ஸ் பண்ணி வருண் மேல் கம்ப்ளெயிண்ட் கொடுக்க வச்சிடுவேனோன்னு அவ பயப்படுற மாதிரி தெரியுது. இதுல அவளை நான் சந்திக்கிறதை எவ்வளவு முடியுமோ அவ்வளவு தடுக்கிறாங்க ஸ்ரீமதி அத்தையும். அவளும் அதைப் பார்த்துட்டுப் பேசாமல் இருக்காளே ஒழிய, என்கிட்ட வேறு எதையும் சொல்ல மாட்டேங்குறா. இது தான் எனக்குப் பெரிய குழப்பமே."

அவனது நீண்ட விளக்கத்தை அமைதியாகக் கேட்ட அஷோக்,

"நமக்குத் தெரிஞ்சு வருண் பொண்ணுங்க விஷயத்தில் தப்பானவன் இல்லை, ஆனாலும் அவன் எப்பவுமே நல்லவனா இருக்க முடியாதுங்கிறதும் நமக்குத் தெரியும். பட், நாம துர்காவையும் நம்பி ஆகணும் ஷிவா.." என்றான்.

"யெஸ் அஷோக்." என்று மட்டும் கூறியவனாய் மேலும் சில நிமிடங்கள் சஹானாவின் மரணத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்க, என்ன முயற்சி செய்தும் ஷிவாவின் மூளையை விட்டு சிதாரா வருண் திருமண விவகாரம் மட்டும் மறைவேனா என்றது.

****************************************************

மல்லியக்குறிச்சிக் கிராமம்.

மலைமுகட்டில் இருந்து வழியும் அருவியின் சலசலப்பைக் கேட்டுக் கொண்டே, அடிவாரத்தில் மலர்ந்து நிற்கும் மலர்செடிகளின் மீது இமைக்க மறந்த விழிகளைப் பதித்தவாறே இதயம் கனக்க அமர்ந்திருந்தாள் துர்கா.

இரு கால்களையும் இறுக்கக்கட்டிக் கொண்டு அதனில் தலையைச் சாய்த்து உட்கார்ந்திருந்தவளின் நிலை, தனக்கும் வருத்தத்தை உண்டுப் பண்ணியது என்பது போல் பொன்னாய் உருகி மேற்கில் மறைந்தான் அந்திச் சூரியன்.

இறுகிப் போன மனதுடன் அமர்ந்திருந்தவளின் நெடிய மூச்சுகள் மலைமுகட்டில் இருந்து கொட்டி வழிந்தோடும் ஆற்றில் மோதியதில், அலையலையாய் கலைந்து சென்றது போல் இருந்தது ஆற்று நீர்.

நீர்நிலைகளின் கரைகளில் செழித்து வளர்ந்திருந்த தாழை மரங்களின் நடுவில் சிதறித்தெறித்தது போல் பூத்திருந்த தாழம்பூக்கள் அழகிய நறுமணத்தை அங்கு விரவச் செய்திருந்தாலும், வெளிர் மஞ்சள் நிற தாழை மலர்கள் கூட அச்சூழலைக் கனப்படுத்தியது போன்ற விசித்திர உணர்வில் மூழ்கியிருந்தாள் பெண்ணவள்.

'அவருக்கும் சிதாராவுக்கும் கல்யாணமுன்னு பெரியவங்க ஏற்கனவே முடிவு எடுத்திருந்த விஷயம் தானே. ஏதோ ஒரு காரணத்துக்காக அது நின்னுப் போயிருந்தது. ஒரு முறை நின்னுப்போன கல்யாணம் அப்படியே நடக்காமல் போயிடுமா, என்ன? அவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடந்தா எனக்கு ஏன் இவ்வளவு வேதனை? என்னைக் கொண்டு போய் மறைச்சு வந்திருந்தவர் மேல் எனக்கு ஏன் இந்த வித்தியாசமான உணர்வுகள்?'

கேள்விகள் படையெடுக்க, பதிலறிந்தும் உண்மையை ஏற்க மறுக்கும் உணர்வுகளுடன் போராடியவளாய் அமர்ந்திருந்தவளின் பார்வை, அருகே மலர்ந்திருந்த இளம் சிகப்பு நிறத்துடன் வெளிர் மஞ்சளும் கலந்திருந்த கற்றாழை பூவின் மீது படிந்தது.

அதன் பேரழகு கண்ணைப் பறித்தது என்றாலும், அதனைச் சுற்றிலும் முளைத்திருந்த முற்கள் நிதர்சனத்தை எடுத்துரைத்தது.

கள்ளிப்பூவின் மீது ஆசைபட்டால் முற்களால் குத்திக் கிழிக்கப்பட வேண்டியது தான் என்ற உண்மை புரிந்ததில், கசந்ததொரு புன்னகை பாவையவளின் உதடுகளில் கசிந்தது.

அதே கணம் அங்கு மும்பையில் அலுவலகத்தில் அமர்ந்திருந்த வருணின் கண்கள், அவனது மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த பத்திரிக்கையில் அச்சடிக்கப்பட்ட வார்த்தைகளில் அசைய மறுத்துப் பதிந்திருந்தது.

Desai Group of Companies, CEO, Varun Desai Weds Sithara Chauhan, the one and only daughter of Minister Muhesh Chauhan

*********************************

இந்தப் பூமியிலே எப்போ வந்து நீ பொறந்த

என் புத்திக்குள்ளே தீப்பொறிய நீ வெதச்ச

அடி தேக்கு மர காடு பெருசு தான்

சின்னத் தீக்குச்சி ஒசரம் சிறுசு தான்

ஒரு தீக்குச்சி விழுந்து துடிக்குதடி

கரும் தேக்கு மரக் காடு வெடிக்குது அடி


உசுரே போகுதே உசுரே போகுதே

உதட்டை நீ கொஞ்சம் சுழிக்கையில

ஓ... மாமன் தவிக்கிறேன் மடிபிச்சை கேக்குறேன்

மனச தாடி என் மணிக்குயிலே


அக்கறை சீமையில் நீ இருந்தும்

ஐவிரல் தீண்டிட நெனைக்குதடி

அக்கினி பழம்னு தெரிஞ்சிருந்தும்

அடிக்கடி நாக்கு துடிக்குதடி

உடம்பும் மனசும் தூரம் தூரம்

ஓட்ட நினைக்க ஆகல

மனசு சொல்லும் நல்ல சொல்ல

மாய ஒடம்பு கேக்கல

தவியா தவிச்சு

உசிர் தடம் கேட்டு திரியுதடி

தையிலன் குருவி என்ன தள்ளி நின்னு சிரிக்குதடி


இந்த மன்மதக் கிறுக்கு தீருமா

அடி மந்திரிச்சி விட்ட கோழி மாறுமா

என் மயக்கத்த தீத்து வச்சு மன்னிச்சிடுமா

சந்திரனும் சூரியனும் சுத்தி ஒரே கோட்டில் வருகிறதே

சத்தியமும் பத்தியமும் இப்போ தலை சுத்தி கெடக்குதே


இந்த உலகத்தில் இது ஒண்ணும் புதுசில்ல

ஒண்ணு ரெண்டு தப்பிப் போகும் ஒழுக்கத்தில

விதி சொல்லி வழி போட்டான் மனுஷ புள்ள

விதி விலக்கு இல்லாத விதியும் இல்ல

எட்ட இருக்கும் சூரியன் பாத்து

மொட்டு விறிக்குது தாமர

தொட்டு விடாத தூரம் இருந்தும்

சொந்த பந்தமும் போகல

பாம்பா விழுதா

ஒரு பாகுபாடு தெரியலயே

பாம்பா இருந்து நெஞ்சு பயப்பட நெனைக்கலியே


என் கட்டையும் ஒரு நாள் சாயலாம்

என் கண்ணுல உன் முகம் போகுமா

நான் மண்ணுக்குள்ள

உன் நெனப்பு மனசுக்குள்ள!


அரிமாக்களின் வேட்டை

தொடரும்...

References:

The seven islands of Mumbai are: Isle of Bombay, Mazagaon, Parel, Worli, Mahim, Little Colaba or the Old Woman's Island, and Colaba. Once in the hands of the British Crown, the islands were transferred to the East India Company.
 

Vidhushini

New member
inbound5389317570795698084.jpg

Both Shiva & Durga were thinking about Varun-Sithara's wedding.

inbound1183604884874067878.jpg

inbound7584302989123693608.jpg
Whether the 2 pairs are meant to be as they are now or to be drift apart...?

இப்படி twist-க்கு மேல twist. ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு @JB sis🔥

மிர்சா சகோதரர்கள் மேல ஷிவா ஒரு கண் வைச்சுட்டான். ஆர்யன் ரகசியமா செய்ற ஆராய்ச்சி பற்றிய விஷயத்துனாலதான் சஹானா கொலை செய்யப்பட்டிருக்கணும்.

Waiting for the next epi @JB sis.
 

Wasee

New member
Oh no.
Innaiku ud la yum kalayanam yaarukku yeppadi aanathu nu theriyala. So sad.adutha ud kaka eager aa waiting...
 

Lucky Chittu

New member
Oru ponnu kamathipura la sethutta apdinu padicha udane ninaichen kandippaathu athu aryanoda aasai nayagi sahana bakshinu. Kandippa konnathu aaryan illa Mirza brothers.
Aaryan Mela kolai case thisai thirumbanumnu senchathunu ennoda guess.
Aprom Varun antha pakkam Durga ninaichu feeling na, Shiva Sithara va ninaichu feeling. Poovellam parthu than nilai enna unarugiraalavukku poitta Durga.

Waiting for the next epi mam.
 
Omg…!!! You’re keeping us on the seat edge… 🔥🔥🔥

Confirmly Mirza brothers should have done this gruesome act to frame Aryan..

Shiv kum Sahana kum edhum connection irukkumo??? Avan kannu kalangi irunthuthu and DGP avanai Sahana case investigate panna solli irukkar…

Omg…!!! Shiv and Durga rendu perume collapse aagi irukkanga intha Varun Sithu wedding nala… Hope Sithu married Shiv ❣️❣️❣️
 

saru

Member
Lovely.jb
Sahana oh god idu edirparthathu tan
Y dgp particular ah sivkita kuduthirukar??? Last encounter la povanubga pola
Mirsha brothers yarukaga senjanga
Sahana ku Aryan matter edo trnjiruku adan avala pottu aryana Target pandranga pola
Aari Varun ediri aga koodathunu yosikuran
Ana mukiyana karupu aaata kotta vititan pola parkalam
Heros randu perum soga Keetham
Kalyanam seen varala y baby
 

Members online

No members online now.
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top