JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakalin Vettai - Episode 6

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை

அத்தியாயம் 6

‘DGP Neerav Prakash Committed Suicide.. He gave a statement to the law officials before his death. This statement would be considered as a ‘dying declaration’ and could be used as evidence in court.’

கடந்த சில நாட்களாகத் தொலைக்காட்சிகள், சமூக ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் மீண்டும் மீண்டும் பறைசாற்றிக் கொண்டிருந்த S.S.P ஷிவ நந்தன், D.G.P நீரவ் பிரகாஷின் கைது சம்பந்தப்பட்ட காட்சிகள், அன்று திசை மாறியிருந்தது.

அந்தத் திசை, தேசத்தில் பல மனிதர்களைப் பெரும் அதிர்ச்சிக்குள்ளும் சோகத்திற்குள்ளும் மூழ்கடித்தது என்றால், அச்செய்தியில் வியப்பிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்ந்த மனிதர்களும் பலர் இருக்கத்தான் செய்தனர்.

D.G.P நீரவ் பிரகாஷின் தற்கொலையும், இறப்பதற்கு முன் அவர் கொடுத்துச் சென்ற மரண வாக்குமூலமும் தான் அன்றைய நாளில் சமூக ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் வைரலாகப் பரவியிருந்த செய்தி.

தற்கொலை செய்து கொள்வது என்று முடிவெடுத்த உடனேயே எவ்வழியில் தன்னை மாய்த்துக் கொள்வது, அதற்கு முன் மருத்துவரையும் நீதிபதியையும் வரவழைத்து அவர்கள் முன் மரண வாக்குமூலம் கொடுப்பதற்கான அவகாசத்தை உருவாக்குவது என்று தெளிவாகத் திட்டமிட்டிருந்தார் நீரவ் பிரகாஷ்.

மரணிக்கும் தருவாயில் இருக்கும் மனிதன் பொய்யன்றி மெய்யே பேசுவான் என்று சட்டம் நம்புகிறபடியாலும், மரண வாக்குமூலம் கொடுக்கும் பொழுது சத்திய பிரமாணம் தேவையில்லை என்பதாலும், நீதிபதியின் முன் அந்த அதிர்ச்சிகரமான வாக்குமூலத்தை அளித்தார் நீரவ் பிரகாஷ்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தைக் கேட்ட நொடியே கைகள் இரண்டாலும் தலையைப் பிடித்தப்படி சிறையில் அதிர்ந்து அமர்ந்துவிட்டான் ஷிவ நந்தன்.

நீரவ் பிரகாஷின் மரண வாக்குமூலத்தின் சாராம்சம் இது தான்.

தான் DGP ஆகப் பதவி ஏற்கும் முன், ஊழல் தடுப்பு பணியகத்தின் தலைமை இயக்குநராகப் பணியில் இருந்த சமயத்தில் ராம் போரா என்றவனின் தொடர்பு கிடைத்தது என்று ஆரம்பித்தது அவரது வாக்குமூலம்.

"துவக்கத்தில் மிர்சா சகோதரர்களைப் போன்று போதைப் பொருள் கடத்தும் கூட்டத்தினரை வேரோடு அழித்துவிட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் நான் போராடி வந்தேன். ஆனால் நாட்கள் செல்ல செல்ல நியாயம் தர்மம் நேர்மை என்ற வார்த்தைகளுக்கு எங்குமே பயணில்லை என்ற முடிவுக்கு நான் வர நேர்ந்தது. அதற்குக் காரணமும் காவல் துறையினரே.

என் பணியை விட்டு விலகிவிடுவது என்ற முடிவிற்கு நான் வந்த வேளையில் தான் மிர்சா சகோதரர்களைப் போன்று போதைப்பொருள் உற்பத்தி செய்யும் மற்றொரு கும்பலைப் பற்றிய தகவல் எனக்குக் கிடைத்தது. நீண்ட நாட்களாக அவர்களைப் பிடிக்கத் திட்டமிட்டுக் கொண்டிருந்த எனக்கு அவர்களைப் பிடிக்கும் சந்தர்ப்பமும் அமைந்தது. ஆனால் அது என்னைப் பிடிக்க அவர்கள் வீசிய வலை என்று எனக்குத் தெரியாது.

நான் எதிர்பார்த்த வகையில் அவர்களை என்னால் பிடிக்க இயலவில்லை. மாறாக நான் அவர்களிடம் சிக்கிக் கொண்டேன். ஒருவருக்கும் தெரியாது அவர்கள் என்னை அடைத்து வைத்திருந்த நேரத்தில் தான் என்னைச் சந்திக்க வந்தான் பண மோசடியில் வல்லவனான [key money launderer] ராம் போரா.

அவன் என்னை மிரட்டவில்லை, துன்புறுத்தவில்லை.. ஆனால் சில நாட்களிலேயே அவனது திறமையால் என்னை அவனது வலையில் வீழ்த்தினான்.

என்னையும் அறியாது அவனது சாதுரியமான திட்டத்தில் நான் விழுந்தேன். கோடிக்கணக்கான கருப்புப் பணத்தைச் சர்வ சாதாரணமாக வெள்ளையாக மாற்றிப் பண மோசடி [money launder] செய்யும் அவனைப் பற்றிய ஒரு விவரமும் அது வரை அரசியல் தலைவர்களுக்கோ காவல்துறையினருக்கோ தெரிந்திருக்கவில்லை. அதற்குக் காரணம் அவனது அதீத புத்திசாலித்தனம். அதே சாதுரியத்தால் தான் என்னையும் அவனது வலையில் விழ வைத்தான் ராம் போரா.

அப்பொழுது தான் எனக்குத் தெரிய வந்தது அவனது முக்கிய எதிரிகளே மிர்சா சகோதரர்கள் தான் என்று. ஆனால் எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் ராம் போராவால் மிர்சாவை நெருங்க முடியவில்லை. அச்சமயத்தில் அவனுக்கு உதவுவதற்காக மிர்சா சகோதரர்களைப் பிடிக்க நான் எவ்வளவோ முயற்சி செய்தும் தோல்வியைத் தழுவி கொண்டிருந்த வேளையில் எனக்கு ஷிவ நந்தன் IPS -ஐ பற்றிய விவரங்களைக் கூறியது ராம் போரா தான்.

ராம் போரா எனக்கு அமைத்துக் கொடுத்த திட்டத்தின் படி எக்காரணத்தைக் கொண்டாவது நான் ஷிவ நந்தனை என்னுடன் இணைத்துக் கொள்ளத் திட்டமிட்டேன். ஏற்கனவே என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று பெயர் வாங்கியிருப்பவர் நிச்சயமாக மிர்சா கூட்டத்தினரை அழிக்கத் தயங்கமாட்டார் என்று முடிவெடுத்து அவரை எங்களுடன் இணைத்துக் கொள்ளத் தீர்மானித்தேன்.

ஆனால் எனக்குப் பின்னால் இருப்பது மிர்சா சகோதரர்களின் எதிரியான ராம் போரா என்பது ஷிவ நந்தனிற்குத் தெரியாது. ஆகையால் என் திட்டத்திற்கு உதவ முன் வந்த ஷிவ நந்தனை எனது கன்ட்ரோலில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் அவருக்குத் தெரியாமலேயே நானும் ராம் போராவும் சேர்ந்துத் திட்டங்கள் தீட்டினோம். அதில் ஒன்று தான் போலிஸ் இன்ஃபார்மர் திலீப் பட்டேலின் கொலை.

நாங்கள் கொடுத்த தகவலின் படி மிர்சா சகோதரர்களின் கூட்டாளிகள் என்று எண்ணியே ஷிவ நந்தன் திலீப் பட்டேலையும் சேர்த்து இன்னும் ஐந்து பேரைக் கொன்றார். ஆனால் உண்மையில் அவர்கள் குற்றவாளிகளே அல்ல. இவ்வனைத்துக்கும் காரணம் நானும் ராம் போராவும் மட்டுமே. ஆனால் ராம் போரா இப்பொழுது இந்தியாவில் இல்லை. அவன் எங்கு இருக்கின்றான் என்று எனக்குத் தெரியாது. ஆகையால் நடந்து முடிந்த அனைத்துக்குமே காரணம் நாங்கள் இருவர் மட்டுமே. S.S.P ஷிவ நந்தன் குற்றவாளியல்ல.

போலிஸ் இன்ஃபார்மர் திலீப் பட்டேல் உட்பட அந்த ஆறு மனிதர்களையும் என்கவுன்டர் செய்யுமாறு அவருக்கு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதும் எனது மறைமுகத் திட்டங்களினால் தான். ஆகக் குற்றவாளிகளாலும், போதைப்பொருள் கடத்துபவர்களாலும் [notorious criminals & drug cartels] இரட்டை வேடம் போட்ட [double game player] என்னைப் போன்றவனாலும் வெகு சாமர்த்தியமாகத் தங்களின் வலைக்குள் வீழ்த்தப்பட்ட ஒரு நேர்மையான காவல் அதிகாரி ஷிவ நந்தன்.

இது எதனையும் அறியாது அவராகவே ட்ரான்ஸ்ஃபர் கேட்டு மும்பைக்கு மாற்றலாகி வந்தார். இங்கு வந்தவர் என்னைப் பற்றி முழுமையாக அறியாது அவரது நேர்மையான செயல் திட்டங்களில் நான் ஏற்கனவே எண்ணியது போல் என்னையும் இணைத்துக் கொண்டார்.

இக்கணம் வரை SSP ஷிவ நந்தனைப் பொறுத்தவரை நான் நல்லவன். ஆனால் அது உண்மை அல்ல. அவரது முதுகில் குத்தியவன் நான். அவரைப் போன்ற ஒரு நேர்மையான அதிகாரிக்கு என்னைப் போன்றவனால் இது மாதிரியான கொடிய தண்டனைகள் கிடைக்கக்கூடாது. அவர் ஒரு நிரபராதி. நானே அனைத்துக் குற்றங்களையும் செய்தவன்.

எப்படியும் ஓர் நாள் இவை அனைத்துமே ஷிவ நந்தனிற்குத் தெரிய வரும். அன்று அவரைச் சந்திக்கும் துணிவு எனக்கில்லை. என்னால் ஒரு கண்ணியமான அதிகாரி இன்று சிறையில் அடைப்பட்டிருக்கின்றார் என்ற குற்ற உணர்வே என் மரணத்திற்குக் காரணம். ”

ஏற்கனவே இவை அனைத்தையும் தன் கைப்பட எழுதி வைத்திருந்த நீரவ் பிரகாஷ் உயர் காவல் அதிகாரி ஒருவரை அழைத்து விஷயத்தைப் பகிர, அவரது விருப்பத்தின் படி சில மணித்துளிகளில் நீதிபதியும் நீரவ் பிரகாஷின் இருப்பிடத்தை அடைந்தார்.

மரணிப்பதற்கு முன் அவரது மரண வாக்குமூலம் எடுக்கப்பட்டது. அத்துடன் அவர் தெளிவாக எழுதியிருந்த தகவல்களும் கிடைக்க, ஷிவ நந்தன் சில நாட்களிலேயே விடுதலை செய்யப்பட்டான்.

ஆனால் அவன் மனதில் இருந்தது ஒரே ஒரு கேள்வி!!

நான் விடுதலையடைவதற்காகவே தன் உயிர் மாய்த்த நீரவ் பிரகாஷ், ஏன் ஆர்ய விக்னேஷைப் பற்றியும் வருண் தேஸாயைப் பற்றியும் ஒரு வார்த்தைக் கூடக் கூறவில்லை.

மிர்சா சகோதரர்களை அடியோடு அழிப்பதும் என் திட்டம் என்பது அவருக்குத் தெரியும், ஆயினும் என்னைச் சிறையில் அடைக்கச் செய்தது ஆர்ய விக்னேஷ் ஆயிற்றே. மிர்சா சகோதரர்கள் எனது கைதிற்குத் துணைப் போயிருப்பவர்கள் மட்டுமே.

ஆர்ய விக்னேஷையும் வருண் தேஸாயையும் பிடிப்பதற்குத் தான் நீரவ் பிரகாஷ் என்னுடன் உண்மையாகவே இணைந்தார்.

பிறகு ஏன் அவர்களைப் பற்றிய விவரங்களை அவரின் மரண வாக்குமூலத்தில் அவர் சேர்க்கவில்லை??

சிந்தனையில் ஆழ்ந்தவாறே பாறையாய் இறுகிப் போன இதயத்துடன் வெளி வந்தவன் அவனது ஃபோர்ஸ் குர்கா எக்ஸ்ட்ரீமில் ஏறிய விநாடியில் அலறியது அவனது அலைப்பேசி.

எடுத்துக் காதில் வைத்தவனின் முகம் மறுமுனையில் கேட்ட வார்த்தைகளில் ஆங்காரத்தில் சிவந்தது.

"வெல்கம் பேக் ஷிவா."

கம்பீரமான குரலில் சிரிப்பு துள்ள கூறியது ஆர்ய விக்னேஷ்.

அவனை அடுத்து, "ஒகே ஆர்யன், நீங்க பேசுங்க.. நான் கிளம்பறேன்." என்ற குரலில் இப்பொழுதும் ஆர்யனுடன் இருக்கின்றான் வருண் என்பது தெளிவாய்த் தெரிந்தது ஷிவ நந்தனிற்கு.

மறுபேச்சு எதுவும் பேசாது அமைதியாகத் தனது வாகனத்தைக் கிளப்பிய ஷிவ நந்தன் நிதானமாய் அதனைச் செலுத்த,

"நீ பேச வேண்டாம் ஷிவா, ஆனா நான் பேசுறேன், நீ கேளு.. அதாவது ரெண்டே ரெண்டு விஷயம் மட்டும் தான் எனக்குப் புரியலை. உன்னைக் காப்பாத்தறதுக்காக ஏன் DGP நீரவ் பிரகாஷ் தற்கொலை செய்துக்கற அளவுக்குப் போகணும்? அதாவது உன் மேல அவருக்கு அந்த அளவுக்குப் பாசமா என்ன? நீ அவருடைய சொந்தம் கூடக் கிடையாதே? ஐ திங்க், அவரைப் போல நேர்மையான அதிகாரி, அதுவும் வெறும் முப்பது வயசே ஆனா இளம் போலிஸ் ஆஃபிஸர் ஜெயிலுக்குப் போனதில் அவர் உடைஞ்சுப் போயிட்டாருன்னு நினைக்கிறேன். அதான் தற்கொலை வரைக்கும் போயிருக்கார்.

எனிவேய்ஸ் ரெண்டாவது, அவருடைய மரண வாக்குமூலத்தில் ஏன் என்னைப் பற்றி அவர் எதுவுமே சொல்லலை? ஐ மீன் நீ இங்க மும்பைக்கு மாற்றல் வாங்கி வந்ததற்குக் காரணமே அவர் தான், அதுவும் என்னைப் பிடிக்கத்தான். அதையும் நீ செஞ்சு முடிச்ச.. பட், பாவம் என்னுடைய பவர் என்னென்னு தெரியாமல் நீ ஆடிய ஆட்டம் பாதியிலே நின்னுப் போயிடுச்சு. ஸோ, ஈஸியா எனக்கும், என் அரசியல் வாழ்க்கைக்கும் எந்தப் பாதிப்பும் இல்லாமல் நான் வெளிய வந்துட்டேன். ஆனாலும் நீ குற்றாவளியா ஒரு சில நாட்களாவது மக்களுக்கு முன் தோன்றியதற்குக் காரணமே நான் தான். ஆனால் ஏன் அவர் என்னைப் பற்றி எதுவும் குறிப்பிடலை? அது தான் எனக்குக் கொஞ்சம் குழப்பமாயிருக்கு.

ஒரு வேளை நீ வெளியில் வந்தால் தான் என்னைத் திரும்பவும் பிடிக்க முடியும்னு அவர் நினைச்சிருக்கலாம். ஆனால் அதுக்காக அவர் தற்கொலை அளவுக்கு எல்லாம் போயிருக்க வேண்டிய அவசியம் இல்லை. என்கிட்ட வந்து ஒரு சின்னச் சாரி கேட்டிருந்தாலே போதும். It’s ok.. Past is past.. But என்னைப் பற்றிய விஷயத்தை அவருடைய வாக்குமூலத்தில் வெளியிடாதது இன்னும் என் மனசைப் போட்டுக் குடைஞ்சிட்டே இருக்கு. அதற்குப் பின்னால் எதுவும் சீக்ரெட் இருக்கா ஷிவா?" என்ற நொடியில் மறுமுனையில் வெகு அமைதியாய் இருந்த ஷிவ நந்தனின் உதடுகள் மெல்லிதான புன்னகையில் விரிந்தது.

அதற்குக் காரணம் நீரவ் பிரகாஷ் இறந்த விநாடியில் இருந்தே இதைப் பற்றி எண்ண ஆரம்பித்து இருந்த ஷிவ நந்தனின் புத்தியில் சம்மட்டியாய் அடித்து நின்ற ஒரே பெயர் வருண் தேஸாய்.

அப்பொழுதும் பதிலேதும் கூறாது வாகனத்தைச் செலுத்துவதிலேயே குறியாய் இருக்க,

"ஒகே ஷிவா, எப்படியும் நான் கேட்குற கேள்விகளுக்கு நீ பதில் கூறப் போறதில்லை.. இட்ஸ் ஒகே. உன் நிலைமை எனக்குப் புரியுது. ஒரு போலீஸ்காரனுக்கு ஜெயில் எப்படி இருக்கும்னு அதை அனுபவிக்கும் வரை தெரியாது. அது தெரிஞ்சப் பிறகு திரும்பவும் போலிஸ்காரனா அவன் மாறுவதற்குக் கொஞ்சம் காலம் ஆகும், அந்த அவசகாத்தை நான் உனக்குக் கொடுக்குறேன்.. அதுவரைக்கும் உன் வாழ்க்கையை நல்லா எஞ்சாய் பண்ணு. அதான் உன் அத்தைப் பொண்ணு துர்கா உனக்காகக் காத்துட்டு இருக்காளே. போய் அவ கழுத்துல ஒரு தாலியைக் கட்டிட்டுக் குடும்பம் நடத்த ஆரம்பி. எல்லாம் நார்மலா ஆகிடும். பிறகு சந்திப்போம். Bye S.S.P ஷிவ நந்தன் IPS, See you soon! " என்றவனாய் அழைப்பைத் துண்டிக்க, அதுவரை எந்தச் சலனமும் இல்லாமல் வாகனத்தைச் செலுத்தி வந்த ஷிவ நந்தனின் முகத்தில் ஆக்ரோஷம் கொப்பளிக்க ஆரம்பித்தது.

சரட்டென்று ஸ்டியரிங்கை ஒடித்துத் திருப்பியவன் சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தியவனாய், கண்களை மூடி அணிந்திருக்கும் சட்டையில் இடப்பக்க காலரை லேசாக இழுத்துவிட்டவாறே கழுத்தை வலப்பக்கமாகச் சாய்த்துப் பின் நிமிர்ந்தவனின் எண்ண ஓட்டத்தில் இருந்தது அனைத்துமே தனக்காக உயிர் மாய்த்த ஒரு கண்ணியமான காவலதிகாரியான நீரவ் பிரகாஷை கேவலமாகப் பேசிய ஆர்யனின் வார்த்தைகள் தான்.

காவல்துறையினுள் நுழைந்த அன்றில் இருந்தே நியாயத்திற்காகப் போராடிய ஒரு மனிதர். இறுதியில் என்ன வெறுப்பினாலோ தன் உயிரையே மாய்த்துக்கொள்ள முடிவு செய்திருக்கின்றார்.

ஆனால் அப்பொழுதும் கூடத் தன்னால் ஒரு இளம் அதிகாரியின் வாழ்க்கை சின்னாப்பின்னமாக ஆகக் கூடாது என்ற எண்ணத்தினால் ஷிவ நந்தனைக் காப்பாற்றிவிட்டு உயிரை விட்டிருக்கின்றார்.

நிச்சயமாக அவரது மரணத்திற்குப் பின்னனியில் இருப்பது ஆர்ய விக்னேஷோ அல்லது வருண் தேஸாயாகவோ தான் இருக்க வேண்டும்.

அவர்களது ஏதோ ஒரு தூண்டுதலினாலோ அல்லது மிரட்டலினாலோ தான் அவர் தற்கொலை வரை சென்றிருக்க வேண்டும்.

அப்படிப்பட்ட ஆர்யனையும் வருணையும் இவ்வாறு வெற்றியில் கொக்கரிக்க விடலாமா?

ஒரு நேர்மையான அதிகாரியின் மரணத்திற்குக் காரணமானவர்களைச் சும்மா விட்டுவிட முடியுமா?

"கண்டிப்பா உன்னை நான் மீண்டும் சந்திப்பேன் ஆர்யன்.. ஆனால் அதுக்கு முன் உனக்குப் பக்கபலமா இருக்கிறானே அந்த வருண், அவனைச் சந்திக்கிறேன்.. பிறகு உன்னிடம் வருகிறேன்."

தனக்குத்தானே கூறிக் கொண்ட ஷிவ நந்தனுக்குத் தெள்ளத்தெளிவாகத் தெரியும்.

சதுரங்க ஆட்டத்தில் ஆர்ய விக்னேஷ் அரசனாக இருக்கலாம்! ஆனால் பலகையில் ஒரு சதுரத்துக்கு மட்டுமே நகரக் கூடிய ராஜா அவன்.

சதுரங்க ஆட்டத்தில் எத்திசையிலும் எத்தனை சதுரத்துக்கும் நகர ஒரே ஒருவரால் மட்டுமே முடியும். மந்திரியின் சக்தியையும் [Bishop/Minister] [Rook/Elephant] யானையின் பலத்தையும் கொண்ட, மிகச் சக்திவாய்ந்த, சதுரங்க விளையாட்டில் மிகவும் மதிப்புமிக்க நபராகத் தன் ஆட்டத்தை நகர்த்தும் ராணி.

அரசனான ஆர்ய விக்னேஷிற்குப் பின்னால் நின்று ராஜதந்திரி போல் செயல்படும் சதுரங்க வேட்டையின் பராக்கிரமசாலி!

மன்னர் சந்திரகுப்த மௌரியரின் அமைச்சரும் வழிகாட்டியுமான ஈடற்ற அரசியல் இலக்கியமான அர்த்தசாத்திரத்தைப் படைத்த சாணக்கியன் இவனே!

வருண் தேஸாய்!

A King may be the most important piece on the chess board however the Queen is the most powerful who performs more moves than anyone else!

*******************************

மலபார் ஹில் [Malabar Hill].

அடர் ப்ரவுன் நிறமும் செந்நிறமும் கலந்த கற்களால் கட்டப்பட்டிருந்த, வருண் தேஸாயின் பிரம்மாண்டமான கோட்டை.

நிச்சயதார்த்த விழாவிற்காகவென்று விமரிசையாக அலங்காரம் செய்யப்பட்டிருந்ததில் மாளிகையைப் போன்று இருந்த அவனது இல்லம் இப்பொழுது பேரரசர்கள் வாழும் அரண்மனைப் போன்று ஆடம்பரமாய் ஜொலித்துக் கொண்டிருந்தது.

இந்த நிச்சயதார்த்த விழாவின் கருப்பொருளே தங்கம் என்பதாலும், சிதாரா சௌஹானின் பெற்றோர் ராஜபுத்திரர்களின் (அரசர்கள்) இனம் என்பதாலும் பொன்னிறமும் மஞ்சள் வர்ணமுமாய்த் தங்கக்கடல் போல் பளபளத்துக் கொண்டிருந்தது அவ்வரண்மனை.

ஆகாயத்தில் இருந்து அகல விரிந்துத் தொங்கும் தங்கக் குடில் போல் தங்கமும் மஞ்சள் நிறமும் கொண்ட மலர்களைக் கொண்டு மாளிகையின் விட்டத்தில் இருந்து தொங்க விடப்பட்டிருந்தது மலர்க்குடை.

அதற்குக் கீழ் பூஞ்சோலையைப் போன்று பூக்களால் மூடப்பட்டது போல் அமைக்கப்பட்டிருந்த இரு நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்திருந்தாள் சிதாரா சௌகான்.

உடல் முழுவதும் தூய்மையான தங்கச் சரிகையால் நெய்யப்பட்ட பட்டுப்புடவையில் தகதகவென ஜொலித்தவாறே அமர்ந்திருந்தவளின் பார்வை, சற்றுத் தொலைவில் தன் தந்தையுடன் அந்த நந்நாளில் கூட எதனையோ தீவிரமாக விவாதித்துக் கொண்டு இருந்த வருண் தேஸாயின் மீது பதிந்தது.

இருவருக்கும் இடையில் நடக்கும் கலந்துரையாடலைப் பார்த்தால் இது நிச்சயதார்த்தம் போலவே தெரியவில்லையே.

ஏதோ அரசியல் அல்லது தொழில் சம்பந்தமான ஒப்பந்தத்திற்கான துவக்கவிழா போலத் தெரிகின்றதே என்று அவளது இளம் உள்ளம் மருகியது.

அதனை ஒத்ததைப் போன்றே இருந்தது அவ்விருவரின் இடுங்கிய கண்களும் இறுகிய முகங்களும், குறிப்பாகச் சிரிப்பு என்பதையே மறந்திருந்த வருண் தேஸாயின் தோற்றம்.

‘இவனுக்கு உண்மையிலேயே என்னைத் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இருக்கின்றதா இல்லையா?’

அவள் நினைக்க, தன்னைப் பற்றித்தான் இவள் சிந்தித்துக் கொண்டிருக்கின்றாள் என்ற உள்ளுணர்வு உந்தியதில் அவளைத் திரும்பிப் பார்த்த வருணின் முகத்தில் எவ்வித உணர்ச்சிகளையும் அவளால் பிரித்தறிய முடியவில்லை.

இருமணம் சேர்வதே திருமணம்!

இதுவே நம் பாரம்பரியத்தின் மண வாழ்வுக்கான கோட்பாடு.

ஆனால் அங்கு அரங்கேறிக் கொண்டிருந்ததோ, இரு அணியினரின், அதாவது அரச வம்சாவளியைச் சேர்ந்த அரசியலில் கோலோச்சி கொண்டிருப்பவர் ஒருவருக்கும், இந்த இளம் 28 வயதிலேயே ஜாம்பவான் என்று பெயரெடுத்திருக்கும் தொழிலதிபன் ஒருவனுக்குமான தனிப்பட்ட நண்மைகளுக்காக ‘ஒன்றிணையாத பாதை’ என்று அறிந்தும், இரண்டு உள்ளங்களை இணைக்கும் நாடகம், நிச்சயதார்த்தம் என்ற பெயரில்.

தேசத்தின் உயர்ந்த பணக்காரர்களின் வரிசையில் தன் பெயர் முதலில் இடம் பெயர வேண்டும் என்று தர்மம், அதர்மம் என்று வித்தியாசம் பாராது உழைத்து உயர்ந்து கொண்டிருக்கும் இளைஞனுக்கும்,

இத்தகையவனைத் தன் கைகளுக்குள் அகப்படுத்துவதற்கான ஒரே வழி என் ஒரே மகளை இவனுக்கு மணமுடித்து என் கைகளுக்குள் இவனை அகப்படுத்திக் கொள்வது என்பதே என்று இவனை வருங்கால மருமகனாய் தேர்ந்தெடுத்த முகேஷ் சௌஹானுக்கும் இடையில் நடக்கும் நாடக அரங்கேற்றத்தின் முதல் படி.

ஆனால் அவர் செய்த மிகப்பெரிய தவறு, இவனது மனத்தினில் தன் மகளின் உருவம் கூடப் பதிந்திருக்கவில்லை என்பதை உணராததே.

அப்படியிருக்க, அவனுடனான தன் மகளின் திருமண வாழ்வு எங்குச் சிறக்கும் என்பதைச் சிந்திக்காது நிச்சயதார்த்த விழாவில் மகிழ்ச்சியுடனும், எதனையோ சாதித்துவிட்ட பெருமிதத்துடன் வலம் வந்து கொண்டிருந்த முகேஷ் சௌஹானுக்கு, தன்னருகில் நின்று கொண்டிருந்த வருண் தேஸாயைக் காணும் நேரமெல்லாம் பெருமிதத்தில் முகம் மிளிர்ந்தது.

முகூர்த்த நேரம் நெருங்கியதில் நிச்சயத்தார்த்த பத்திரிக்கையை வாசிக்கும் நேரம் வந்துவிட்டதையும், பிறகு மோதிரம் அணியும் சடங்கையும் துவங்க வேண்டும் என்று அறிவித்துப் பெரியவர்களைப் புரோகிதர் அழைத்தார்.

"வாங்க வருண். முகூர்த்த வேளை முடியறதுக்குள்ள பத்திரிக்கையைப் படிச்சிட்டு, மோதிரம் மாத்திடுவோம்."

வருங்கால மாமனாரின் கூற்றிற்குப் பதிலுரைக்காது மேடையில் அமர்ந்திருக்கும் சிதாராவை உணர்ச்சிகளற்ற முகத்துடன் பார்த்தவன் "ம்ம்ம்" என்று கூறியவனாய் மேடையை நோக்கி நகர, தந்தையையும் தன்னை மணமுடிக்கப் போகிறவனையும் மேடையில் இருந்தவாறே பார்த்திருந்த சிதாராவின் இதயம் மென்மேலும் இறுகியது.

'இது என்ன மாதிரியான கல்யாணம்? அந்தக் காலத்துல ஒரு நாட்டைத் தன் கைக்குள் அகப்படுத்த போர் புரியும் அரசன், வெற்றிப் பெற்ற பிறகு எதிரி நாட்டு அரசனின் மனைவி களையும் அவனது அந்தப்புரத்தில் இருக்கும் பெண்களையும் தன் இச்சைக்காக அகப்படுத்திக் கொள்வான் என்று கேள்விப்பட்டிருக்கின்றேன். அது போன்ற ஒரு நிகழ்வா இது? என்னையும் வெற்றியின் அடையாளமாக இவன் கைகொள்ளப் போகின்றானா? அப்படி இவன் அடைந்த வெற்றி தான் என்ன?

இல்லை தோல்வியை அடையும் முன்னரே சரணாகதி அடையும் நேரம், தன் வசம் இருக்கும் பெண்டீரை எதிரிக்குப் பணயம் வைக்கும் கோழை அரசன் ஒருவனுக்கு மகளாகப் பிறக்கும் பெண்ணின் நிலை தான் என்னுடையதோ?’

மங்கையவளது உள்ளம் கலங்கித் துடித்தாலும் கல்லாய் ஒடுங்கிப் போன இதயத்துடன் அமர்ந்திருந்தவளை வெற்றுப் பார்வைப் பார்த்தான் அவளது வருங்கால மணமகன்.

என்ன நினைத்தானோ அர்த்தமே இல்லாத ஒரு புன்னகையை உதடுகளில் படரவிட்டவாறே மேடையில் அவன் ஏறியதும் எழுந்தவள் தலை கவிழ்ந்து நிற்க, அவளருகே ஆனால் இரு அடிகள் விட்டே நின்றவன் சபையில் அமர்ந்திருப்போரைப் பார்க்க, நிச்சயத்தார்த்த பத்திரிக்கை வாசிக்கப்பட்டது.

'மங்களகரமான ஸ்ரீ ------ வருடம் -------- மாதம் ------- என்று துவங்கி, கூடிய சுபதினத்தின் மாலை ஆறு மணிக்கு மேல், எட்டு மணிக்கு முன்னர், -------- லக்கினத்தில்,

திருக் காஷ்யப் தேஸாய், திருமதி மீரா தேஸாய் அவர்களின் பேரணும், திருச் சஞ்சீவ் தேஸாய், திருமதி மஹிமா தேஸாய் அவர்களின் குமாரனுமான சிரஞ்சீவி வருண் தேஸாய் என்ற வரணுக்கும்,

திரு ஜாதவ் சௌஹான், திருமதி நீலம் சௌஹான் அவர்களின் பேத்தியும், திரு முகேஷ் சௌஹான், திருமதி ஷ்மிதா சௌஹான் அவர்களின் குமாரத்தியுமான சௌபாக்கியவதி சிதாரா சௌஹான் என்ற வதுவைக்கும்,

மேற்படி நன்னாளில் ------------- மண்டபத்தில் திருமணம் நடத்த இறையருள் துணைக்கொண்டு பெரியவர்கள் முன்னிலையில் மணமக்கள் பெற்றோர் சம்மதத்துடன் இந்தத் திருமண உறுதி ஒப்பந்த பத்திரிக்கை எழுதப்பட்டிருக்கின்றது ' என்று இருவரின் கோத்திரங்களையும் சேர்த்து புரோகிதர் மடலை வாசித்து முடிக்க,

தனக்கருகில் நிற்கும் உறவினரிடம் இருந்து சிறிய நகைப்பெட்டியை வாங்கிய வருண் அதனில் இருந்து சிறு வைரக்கற்கள் பதிக்கப்பட்ட மோதிரத்தை சிதாராவின் மெல்லிய விரல்களைப் பற்றிப் போடுவதற்கு எத்தனித்த நேரம் தான் கவனித்தான்.

மலர் இதழ்களை விட மென்மையாய் இருந்த பேதையவளின் ரோஜாப்பூ நிற [French Rose] நகச்சாயம் பூசப்பட்ட மெல்லிய விரல்கள் மெல்லமாய் நடுங்குவதை.

‘இது வரை இவளிடம் தனிப்பட்ட முறையில் ஒரு வார்த்தைக் கூடப் பேசியிருக்கவில்லை. ஆகையால் தான் என்னைக் கண்டு இந்த நடுக்கமோ? வாழ்நாள் முழுவதும் என்னுடன் வரப் போகிறவள், மனம்விட்டு ஒரு தடவையாவது பேசியிருக்க வேணுமோ?'

மனத்திற்குள் எண்ணியவன் அவளை ஒரு முறைக் கூர்ந்துப் பார்த்துவிட்டு மீண்டும் மோதிரத்தைப் போட எத்தனிக்கும் முன், அவனே எதிர்பாரா வகையில் அங்கு நுழைந்தனர் காவல் அதிகாரிகள்.

அவர்களைத் தொடர்ந்து கம்பீரமாக உள் நுழைந்த ஷிவ நந்தனின் உதடுகளில் துவங்கப் போகும் வேட்டையின் முடிவை இப்பொழுதே கணித்தது போன்ற ஒரு வெற்றிப் புன்னகை நெளிந்தது.

வருணின் தீட்சண்யமான கண்கள் மேலும் கூர்மையடைந்தன!

அரிமாக்களின் வேட்டை!

தொடரும்..
 
Last edited:

Vidhushini

New member
I didn't expect this twist.

ஷிவா Vs. வருண்.
inbound1254060968573670099.jpg
இப்போ எந்த நிகழ்வு நடந்தாலும் மனதளவில் பாதிக்க/காயப்படப்போறது என்னவோ சித்தாராதான்.

சமயோசிதமா அல்லது அதிபுத்திசாலியா அல்லது தந்திரமா செயல்படுவானா வருண் தேஸாய்?

ஷிவா, DGP நீரவ் தற்கொலைக்கு நியாயம் செய்யாமல் பின்வாங்கப் போறதில்லை.

Sema interesting @JB sis🔥
 
Enekkum Neerav Prakash death la suspicious ah irukku… adhu suicide polavim theriyala…
Varun and Aryan than konnirukkanum some how..
They’re behind his sudden demise… 🫤🫤🫤

Varun oda engagement scene start aagum podhe ninaichen… adhu nadakkathu nu 🤭🤭🤭
Sithara pair Shiv Nandhan than ❣️❣️❣️
Ippo Varun ah arrest panna varrana???
Teaser la Varun Shiv wedding time varuwane avan home ku… appo Shiv solluwan un visheshathai nan kedukkirathum en visheshathai ne kedukkirathum sagajam thane something…

So ange than Varun and Durga track start aaganum..
 
Neerav sir death ku Varun sambantha patrukkaan. Adhukku thavalai mathiri aaryan maraimuga vaakku moolam koduthirkkaan. Shiv Kum sitharakkum match, varunum Durga match aga ivunga sandaila avanga durgavum sithara and seetha thaan bathikka poraanga. Waiting for the next update mam.
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top