JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

Arimakkalin Vettai - 27

JLine

Moderator
Staff member
அரிமாக்களின் வேட்டை!

அத்தியாயம் 27

மாப்பிள்ளை விட்டார் அழைப்பு, உறவினர்களின் வீட்டு விருந்து, குலதெய்வக் கோவில் தரிசனம் என்று அனைத்தையும் ஒதுக்கி வைத்தவனாய், திருமணம் முடிந்த மறுநாளே மனைவியை அழைத்துக் கொண்டு மும்பைக்குக் கிளம்பியிருந்தான் ஷிவா.

அங்கும் அவனது பிடிவாதம் குறையவில்லை.

எவ்வளவோ சிதாரா கெஞ்சியும் மாமனாரின் வீட்டு வாயிலைக் கூட மிதிக்க மாட்டேன் என்று பிடிவாதமாய் மறுத்திருந்தவன் தனக்கென்று ஒதுக்கப்பட்டிருந்த பங்களாவிற்கே மனையாளை அழைத்துச் சென்றிருந்தான்.

பல இடங்களில் இருந்து சஹானா பாக்ஷியின் கொலைக்குக் காரணமானவர்களைக் கண்டுப்பிடிக்க டி.ஜி.பிக்கு வந்த நெரிசலில் வேறு வழியின்றி ஷிவ நந்தனை உடனடியாக வருமாறு அவர் அழைத்திருந்ததே அதற்குக் காரணம்.

இரு கோணங்களில் அந்தக் கொலையை விசாரித்து வந்தவனுக்கு ஒரு கோணத்தின் முடிவு ஆர்ய விக்னேஷ்.

மறு கோணத்தின் முடிவில் இருந்தவர்கள் மிர்சா சகோதரர்கள்.

ஆனால் ஏதோ இதில் முழுமையாக ஈடுப்பட்டிருப்பது கலானி மிர்சா என்றே ஷிவாவின் உள்ளுணர்வு கூறிக் கொண்டிருந்தது.

ஆகையால் முதலில் தனது சந்தேக வட்டத்தில் இருக்கும் ஆர்யனை விசாரித்து, ஒருவேளை அவனுக்கும் இந்தக் கொலைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லையெனில் அவனை இதில் இருந்து விலக்கிவிடலாம் என்று எண்ணியிருந்தான் ஷிவா.

அதற்குக் காரணம் அரசியல் வட்டாரத்தில் இருந்து வந்த நெருக்கடிகளே.

அன்றும் வழக்கம் போல் விடியற்காலையிலேயே எழுந்தவன் இன்னமும் உறக்கத்தைத் தொலைக்க விரும்பாது அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் மனைவியின் நெற்றியில் முத்தம் பதிக்க, கணவன் தன்னைத் தொட்டதோ முத்தமிட்டதோ எதையும் அறியாது படுத்திருந்தவளைக் கண்டவனுக்குச் சிரிப்பு தான் வந்தது.

"கும்பகர்ணி, ஆனால் அழகான கும்பகர்ணிடி."

கூறியவனாய் அலுவலகத்திற்குக் கிளம்பியவனின் அன்றைய முக்கிய வேலை ஆர்யனை சந்திப்பது.

******************************

மும்பையின் மேற்கு புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள, ஜூஹுவின் கடற்கரையோரத்தில் அமைந்துள்ள பன்னிரெண்டாயிரம் சதுரடிகளில் கட்டப்பட்டிருந்த மூன்று அடுக்கு மாடிகள் கொண்ட மாளிகையின் முன் நின்றது, ஷிவாவின் ஆரஞ்சு நிற குர்கா எக்ஸ்ட்ரீம்.

அவனுக்குள் பல யோசனைகளும் வினாக்களும் படையென சூழ்ந்திருக்க, அவனது அனுபவ அறிவு அதற்கான விளக்கங்களையும் விடைகளையும் ஏற்கனவே விவரித்திருந்தது தான்.

ஆயினும் இன்னமும் சில புரியாத மர்மமான புதிர்கள் சஹானாவின் மரணத்திற்குப் பின் இருக்கின்றது என்று அவனது புத்தி கூறியதில் எப்படியும் அதற்கான முடிவினைத் தெரிந்துக்கொள்ளும் நோக்குடனே ஆர்யனை சந்திக்க வந்திருந்தான்.

இன்று அலுவலத்திற்கு நான் செல்லவில்லை, வேண்டுமென்றால் என்னை என் வீட்டில் வந்து சந்திக்கலாம் என்று குறுந்தகவல் அனுப்பியிருந்த ஆர்யனை சந்திப்பதற்கென்று வந்திருந்தவனின் எண்ணத்தில் தோன்றிய முதல் பெயர் சீதாலட்சுமி.

அவளது சிறு வயது நாட்களையும், வெகு சில காலமே என்றாலும் தன்னுடனான அவளின் நட்பையும் நினைத்தவன் பெருமூச்சுவிட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்தியவனாய் வீட்டின் அழைப்பு மணியை அடிக்க, நிமிடங்கள் சில கழித்துக் கதவைத் திறந்த சீதாவின் முகம், வாயிலில் எதிர்பாராமல் சந்தித்த தன் பால்ய நண்பனைக் கண்டு மலர்ந்தது.

மறு விநாடி உடனேயே அவளது விரிந்த முகம் சுருங்கியும் போனது.

"வா ஷிவா.. அதிசயமா இருக்கு, மும்பைக்கு ட்ரான்ஸ்ஃபர் வாங்கி வந்திருக்கன்னு கேள்விப்பட்டதில் இருந்து என்னைப் பார்க்க ஒரு தடவையாவது வருவன்னு எதிர்பார்த்தேன்."

அன்பொழுக வரவேற்கும் இளம் வயது தோழியின் கண்களை ஆழ்ந்துப் பார்த்தவன் வீட்டிற்குள் நுழைய, ஏறக்குறைய அரசர்களின் அரண்மனையைப் போன்று பளபளத்து ஜொலித்த அவ்வீடு ஷிவாவின் உதடுகளில் முறுவலைக் கொணர்ந்தது.

"என்ன ஷிவா சிரிக்கிற?"

"ஒரு விதத்தில் நீ வாழற வாழ்க்கையைப் பார்த்து பெருமையா இருக்கு சீதா, ஆனால்.."

முடிக்காது விட்டவனைக் கண்டு புன்சிரிப்போடு, "வா ஷிவா, முதல்ல வந்து உட்காரு.." என்றவளாய் அவனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று அமர வைத்தாள் சீதாலட்சுமி.

அந்த மூன்றடுக்கு மாளிகையை அங்குலம் அங்குலமாகத் துழாவிய ஷிவாவின் கழுகுப் பார்வையைக் கண்டு மெல்ல சிரித்தவள்,

"இருக்கிறதுக்கு ஒரு வீடு கூட இல்லாமல் தெருவில் ஒரு நாள் நின்றவள், இப்போ இவ்வளவு பெரிய வீட்டுல வாழறேன்னு நினைக்கிறியா ஷிவா?" என்றதில் ஷிவாவின் உள்ளத்திற்குள்ளும் ஒரு வித வருத்தம் சூழ்ந்தது.

காரணம் சீதாலட்சுமியின் சிறு வயது வாழ்க்கை.

ஒரு செல்வந்தரின் வீட்டில் ஐந்து குழந்தைகளில் மூத்தவளாகப் பிறந்தவள், இந்தச் சீதாலட்சுமி.

தேனி மாவட்டத்தின் பெரியக்குள தாலுக்காவைச் சார்ந்த தாமரைக்குளத்திற்கு அருகில் உள்ள நாவக்குறிச்சி என்ற கிராமமே, சீதாலட்சுமியின் பெற்றோர் வாழ்ந்த கிராமம்.

அங்கு விவசாயமும், பல நூறு ஏக்கர் கணக்கான தென்னந்தோப்புகளுமாய்க் கோலோட்சிக் கொண்டிருந்தவர் சீதாலட்சுமியின் தந்தை.

மனைவி மக்களின் மீது அலாதியான பாசம் வைத்திருந்தவர் ஒருவரும் எதிர்பாராத வகையில் திடீரென்று ஒரு நாள் மாரடைப்பால் இறந்துவிட, அடுத்தக் கணமே வீட்டிற்குள் சட்டமிட்டு அமர்ந்திருந்தனர், அவரின் உடன் பிறந்தவர்கள்.

ஒரே வாரத்தில் அவரது சொத்துக்கள் முழுவதும் தங்களின் தந்தை சம்பாதித்தது, எல்லாமே குடும்பச் சொத்துக்கள் என்று வாதம் செய்த அவரது சகோதரர்கள், சீதாலட்சுமியின் அன்னையை மனசாட்சியின்றி விட்டைவிட்டே வெளியேறச் செய்தனர்.

படிப்பறிவும் இல்லாது, அவர்களை எதிர்த்து வழக்காடும் தைரியுமும் அல்லாது, ஐந்து குழந்தைகளுடன் வெளியே வந்த சீதாலட்சுமியின் தாய், தன் அன்னை வசிக்கும் தாமரைக்குளத்திற்கும் செல்லாது, கணவன் வாழ்ந்த கிராமத்தில் வசிக்கவும் மனம் இடம் கொடாது, கூடம்பட்டி என்ற மற்றொரு கிராமத்திற்கு இடம் பெயர்ந்தார்.

அவரைச் சுற்றிலும் ஏழ்மைத் தலைவிரித்தாடியதில், அநாதரவாக நின்றச் சூழ்நிலையில் தட்டுத்தடுமாறி ஒரு வேளை உணவையாவது குழந்தைகளுக்குக் கொடுக்கலாம் என்று கூடம்பட்டி கிராமத்தில் ஒரு பணக்காரரின் வீட்டில் வேலைக்காரப் பெண்மணியாகப் பாத்திரம் துலக்கும் வேலைக்குச் சேர்ந்தார்.

அந்த வீட்டின் எஜமானியின் மகன், ஆர்ய விக்னேஷின் தோழன்.

தன் நண்பனைப் பார்க்க ஒரு நாள் அவ்வீட்டிற்கு வந்த நேரம் தான், அம்மாவின் உடல்நிலை சரியில்லாததால் அவருக்குப் பதிலாக வேலை செய்ய வந்த சீதாலட்சுமி ஆர்யனின் கண்களில் பட்டாள்.

பார்த்தக் கணமே அவள் மீது காதல் வயப்பட்டான் இருபது வயது இளைஞனான ஆர்யன்.

அது அவன் அரசியலில் ஒரு சாதாரணத் தொண்டனாகக் காலடி எடுத்து வைத்த நேரம்.

ஆனால் வெகு சில காலத்திலேயே அவனது கட்சி தலைவருக்கு நம்பிக்கைக்குரிய தொண்டனாக மாறியவன் கிடுகிடுவென்று அரசியல் ஏணியில் ஏறியவனாய், எம்.எல்.ஏ, எம்.பி என்று பல பதவிகளுக்கு முன்னேறினான்.

பணம், புகழ், செல்வாக்கு, அந்தஸ்து என்றணைத்தும் சேர்ந்த நேரம் திரைப்படம் மற்றும் விளம்பர மாடல் நடிகைகளின் அந்தரங்க உறவுகளும் அவனுடன் இணைய, வாழ்க்கையில் ஒருவரும் அடைய முடியாத இடத்தில் அபார வெற்றியுடன் அமர்ந்திருந்தவன் மகிழ்ச்சி ஆரவாரத்தில் திளைத்திருந்த நேரம் அது.

ஆயினும் அவனது ஆழ்மனத்தில் வீற்றிருந்த சீதாலட்சுமியைத் தவிர வேறு ஒரு பெண்ணைத் தன் வாழ்க்கைத் துணைவியாக எந்நாளும் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்று தனக்குத்தானே உறுதி மொழி எடுத்திருந்தவன், இறுதியாக அவளையே தனக்கு மணமுடித்துக் கொடுக்குமாறு அவளது அன்னையிடம் தன் நிலையில் இருந்து கீழ் வந்து பணிவோடு வேண்டினான்.

வரதட்சணையாகக் கொடுக்க எங்களிடம் ஒன்றும் இல்லை என்று சீதாலட்சுமியின் அன்னை மனம் கலங்க, 'நீங்க எதுவும் கொடுக்க வேண்டாம், மாறாக உங்கள் குடும்பத்தை நான் நல்ல நிலைக்குக் கொண்டு வருகின்றேன் என்று வாக்குக் கொடுத்தவன் உங்கள் பெண்ணை மட்டும் எனக்குக் கொடுங்க' என்றதுமே அடுத்த முகூர்த்தத்திலேயே ஆர்ய விக்னேஷ், சீதாலட்சுமியின் திருமணம் நிறைவேறியது.

அவனது அப்போதை நிலையில் அவன் விரும்பியிருந்தால் பெரும் கோடீஸ்வரர்களின் மகள்களில் எவரையேனும் கூட மணந்திருக்கலாம்.

ஆனால் ஒரு வீட்டில் வேலைக்காரப் பெண்மணியாகப் பணிப்புரிந்து வந்தவரின் மகளை, அதுவும் தான் முதன்முதலாகச் சந்தித்த அன்று அவளும் ஒரு வேலைக்காரப் பெண்ணாகப் பாத்திரம் துலக்கிக் கொண்டிருக்க, அக்கணம் அவளைக் கண்டவன் கண்டதுமே காதல் என்றும், அவளைத் தான் மணமுடிப்பேன் என்றும் உறுதிப் பூண்டிருந்தவன் அவளையே திருமணமும் செய்திருந்தான்.

சீதாலட்சுமி கூறுவது போல் வெளியில் அவன் கெட்டவன், ஆனால் குடும்பத்திற்குள் அவன் மகா நல்லவன்.

கொடுத்த வாக்கிற்கிணங்க, சீதாலட்சுமியின் உடன் பிறந்தவர்கள் அனைவரும் தலையெடுக்க நல்ல வழிக் காட்டியவன். இன்று வரை அவர்களுக்கு ஒன்று என்றால் அவர்களே கூறாவிடினும் தானாகவே முன்னால் சென்று நிற்பவன்.

சீதாலட்சுமியின் இரு தங்கைகளுக்குத் திருமணமும், இரு தம்பிகளின் கல்லூரிப் படிப்பும் அவனது செலவே.

பணத்தைத் தன் குடும்பத்திற்காக வாரி இறைப்பது மட்டுமல்ல, தங்கத்தட்டில் வைத்து தனது குடும்பத்தினையே தாங்கும் கணவனின் நற்குணம், அவனது பிற இழிச்செயல்களால் அலைப்புற்று இருந்த சீதாலட்சுமியின் நெஞ்சத்திற்கு ஒரு விதத்தில் சிறிதாவது இளைப்பாறுதல் கொடுத்தது என்றே சொல்லலாம்.

தான் கேட்ட கேள்விக்குப் பதில் கூறாமல் வீட்டையே அளவெடுப்பது போல் சுற்றும் முற்றும் பார்த்தவாறே அமர்ந்திருந்த ஷிவாவைக் கண்டு சிறு முறுவலுடன், “நான் கேட்ட கேள்விக்கு நீ இன்னும் பதிலே சொல்லலை ஷிவா..” என்றாள்.

அவளின் கூற்றில் அவளைத் திரும்பிப் பார்த்தவன் அப்பொழுதும் பதில் கூறாது அமர்ந்திருக்க, அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் தானும் அமர்ந்தவளாய், “என்னுடைய பழைய வாழ்க்கையையும் இப்ப நான் வாழ்ந்திட்டு இருக்கிற வாழ்க்கையையும் கம்பேர் பண்ணி பார்த்துட்டு இருக்கன்னு நினைக்கிறேன்.” என்றாள் தான் முன்னர்க் கேட்ட அதே கேள்வியை வேறு விதமாய் மாற்றியமைத்து.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை சீதா..”

“பிறகு ஏன் பேச்சே காணோம்?”

“நீ இப்போ ஒரு மினிஸ்டரின் வைஃப். அதற்கேற்றார் போல் பெரிய அரண்மனை மாதிரியான வீட்டில் தான் வாழற. அதில் ஒண்ணும் சந்தேகம் இல்லை. ஆனால் நீ நிச்சயமா சந்தோசமா இருக்கியா சீதா?”

"நான் சந்தோசமா இருக்கேன்னு நினைக்கிறியா இல்லை கஷ்டப்பட்டுட்டு இருக்கேன்னு நினைக்கிறியா?"

உட்கார்ந்திருந்த நாற்காலியில் சற்று சாய்வாய் அமர்ந்தவன், "நான் கேட்டக் கேள்வியைத் திரும்பவும் நீ என்கிட்டயே கேட்குற.." என்றான் கண்கள் இடுங்க, தனது வழக்கமான அதிகாரத் தோரணையில்.

"சந்தோசமா தான் இருக்கேன் ஷிவா.."

"என்னால் நம்பவே முடியலை சீதா.”

“ஏன்?”

“நான் தாமரைக்குளத்துக்கு வந்திருந்தப்ப, ஆர்யன் உன்னைக் கல்யாணம் பண்ணிக்க விரும்பறதா உன் பாட்டி என்னிடம் ஒரு முறை சொன்னாங்க. நியாபகம் இருக்கா?”

“ம்ம்ம். என்கிட்ட அதைப் பற்றிப் பேசினாங்க..”

“அப்பவே நான் உன் பாட்டியிடம் சொன்னேன். ஆர்யன் அரசியலில் பெரிய பதவிகள் வகிக்கலாம், ஆனால் அந்த இடத்துக்கு வருவதற்கு அவன் நிறையத் தவறுகள் செய்திருக்கான். சீதா அவனைக் கல்யாணம் பண்ணிக்கக் கூடாது. அவன் நல்லவன் இல்லை. அவளுடைய வாழ்க்கையையே அவன் சீரழிச்சிடுவான்னு. ஆனால் உன் குடும்பச் சூழ்நிலை உன்னை அப்படி ஒரு முடிவெடுக்க வச்சிடுச்சுன்னு சொன்னாங்க. பட், எப்படிச் சீதா? இவ்வளவு நாள் கழிச்சும், அவன் உண்மை முகம் தெரிஞ்சும் நீ அவன் கூட.."

அவன் முடிக்காது விட்டதைத் தான் தொடர்வது போல், "ம்ம்ம் சொல்லு, நான் அவர் கூட.." என்றாள் புருவங்களை வியப்புடன் உயர்த்தி.

“சந்தோஷமா இருக்கன்னு சொல்றியே..”

“அது தான் உண்மை ஷிவா.”

"சரி, அதை விடு. ஆனால் நான் அந்தக்காலத்தில் பார்த்த சீதா இது இல்லையே. ‘பொம்பளை புள்ளைங்க எல்லாம் சேர்ந்து பல்லாங்குழி ஆடுறப் போதே ஏமாத்தி விளையாடுற புள்ளைகளை உண்டு இல்லைன்னு செஞ்சிடுவா சீதாலட்சுமின்னு’ என் தங்கை தெய்வா சொல்லி நான் நிறையத் தடவை கேட்டிருக்கேன். ஆனால் அந்தச் சீதா எங்க? இப்போ அரசியல்வாதிங்கிற பேரில் அநியாயம் செய்துட்டு இருக்கிறவன் ஆர்யன். அவனுடைய மனைவியா அவன் செய்ற முறைக்கேடான காரியங்களை ஏற்றுக் கொள்கிற மனைவியா அந்தச் சீதாவை என்னால் ஏத்துக்க முடியலை.."

"ஷிவா, நான்கு குழந்தைகளுக்கு முன்னால் பிறந்தவள் நான். என் தங்கைகள் தம்பிகள் அப்படின்னு அவங்களோட நல்ல வாழ்க்கைக்காக என் வாழ்க்கையைச் சமர்ப்பிச்சவள் நான். அப்படிப்பட்டவளுக்குக் கடவுள் கொடுத்தது ஒரே ஒரு குழந்தை. என் குழந்தைக்காக நான் எந்தளவுக்குத் தியாகம் செய்வேன்னு உனக்குத் தெரியாதா?"

"அதாவது உன் கணவனின் கள்ளத் தொட.." என்றவன் சட்டென நிறுத்தி, "அஃபேர்ஸ் [affairs] தெரிஞ்சுமா?.." என்றான்.

தமிழில் கூறினால் என்ன? ஆங்கிலத்தில் கூறினால் என்ன? இழிவான வார்த்தைகள் தானே அவை.

அவனது கேள்வி அவளது இதயத்தைச் சரி பார்த்து ஈட்டியின் வேகத்தில் குத்தி கிழித்தது.

ஆயினும் அவள் இருக்கும் நிலையிலும் அனைத்தையும் சகித்துப் போக வேண்டியதும் கட்டாயமாயிருக்க, கணவனின் பிற பெண்கள் தொடர்பு தெரிந்தும், பல பிரமுகர்கள் வீட்டில் இவற்றை எல்லாம் சாதாரண விஷயமாகக் கடந்து செல்லும் மனைவிமார்களும் இருக்கிறார்களே என்று தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டவள் அவள்.

ஆனால் அதே வார்த்தையைத் தன் பால்ய நண்பன், அதுவும் தான் ஒரு காலத்தில் மனமாற விரும்பிய ஒருவன் கூறும் பொழுது மட்டும் அருவருப்பாய் உணர்ந்ததில் அந்நிமிடமே அப்படியே விட்டத்தில் தொங்கி உயிரை விட்டுவிட மாட்டோமா என்று தொய்ந்துப் போனாள்.

அவளின் முகம் வாடி வதங்கியதைக் கண்டு மனம் சுணங்கியவனாக,

"உன்னைக் காயப்படுத்தணும்னு நான் சொல்லை சீதா. ஆனால் கொஞ்சம் யோசிச்சுப் பாரு. மத்திய அமைச்சருங்கிற போர்வையில் ஆர்யன் வெளியத் தெரியாதளவிற்கான பெரிய க்ரிமினல் வேலைகளில் ஈடுபட்டு இருக்கான். அதனால்." என்றவனைப் பேச விடாது,

"என் அப்பா சாகும் போது நாங்க எல்லாம் ரொம்பச் சின்னக் குழந்தைகள் ஷிவா. அவரைப் பற்றிய நியாபகங்கள் எங்களுக்கு ரொம்பவே குறைவாத்தான் இருக்கு. ஆனால் என் நிலைமை என் குழந்தைக்கு வரக்கூடாது. என் குழந்தையோட வளர்ச்சியை அவனுடைய அப்பா அவன் கூட இருந்து பார்க்கணும். அதே போல் அவனுடைய அப்பாவைப் பார்த்து அவன் வளரணும்." என்றாள் விழிகளில் நீர் தட்ட.

"அதாவது ஒரு கெட்ட மனிதனா?"

"ஷிவா, அவர் வெளியில் தான் ஒரு அரசியல்வாதி. அது எந்த மாதிரியான அரசியல்வாதியா வேணா அவர் இருக்கலாம், ஆனால் வீட்டுக்குள் அவர் ஒரு நல்ல அப்பா."

"ஏன் வளர்ந்ததும் உன் குழந்தைக்கு அவன் அப்பாவைப் பற்றிய உண்மைகள் தெரிய வராதா?"

"அதை அப்போ பார்த்துக்கலாம் ஷிவா."

"சீதான்னு பெயர் வச்சாலே நெருப்புல விழுறதுக்கான துணிவோட தான் பெண்கள் பிறப்பாங்க போல இருக்கு.."

அவனது கிண்டலில் ஒரு வலி மிகுந்த புன்னகையைச் சிந்தியவள், "சரி என்னைவிடு, புதுசா கல்யாணம் பண்ணியவன் நீ. உன் திருமண வாழ்க்கை எப்படி இருக்கு?” என்றாள்.

“பேச்சை மாத்தாத..”

ஏறக்குறைய அதட்டும் குரலில் அவன் கூற, கண்களில் நீர் திரண்டிருந்தாலும் வேதனையை மறைத்தவளாய் சட்டெனச் சிறிது சத்தமாகவே சிரித்தவள்,

“சரி, நம்ம துர்கா குட்டி எப்படி இருக்காள்? சின்ன வயசிலேயே அவ உனக்கு, நீ அவளுக்குன்னு உங்க அப்பாவும் அவ அம்மாவும் முடிவெடுத்துட்டாங்கன்னு பாட்டி சொல்லிருந்தாங்க. அப்படித்தான் நானும் நினைச்சிருந்தேன், ஆனால் நீ கல்யாணம் பண்ணியிருக்கிறது மினிஸ்டர் முகேஷின் மகள் சிதாராவன்னு கேள்விப்பட்டேன். ஏன் என்ன ஆச்சு?” என்றாள் பேச்சை மாற்றும் விதமாய்.

“ஏன் அதை உன் ஹஸ்பண்ட் சொல்லலையா? அந்த மகாப்பெரிய மினிஸ்டருக்கு தான் எல்லாமே தெரியுமே. இல்லை தெரியாத மாதிரி நடிச்சானா?”

“ம்ப்ச். அவருக்கு உண்மையில் எதுவும் தெரியலை. சரி அதைவிடு. ஒரு நாள் உன் வைஃப்போடு இங்க வர்றியா? புதுமணத் தம்பதியருக்கு என் கையால் நம்ம தமிழ்நாட்டு ஸ்பெஷல் விருந்து சமைச்சு போடுறேன்.”

அவளின் பேச்சிற்கான காரணம் அவர்களுக்குள் நடந்து கொண்டிருந்த விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே என்பதைப் புரிந்துக்கொள்ள இயலாதவனா ஷிவ நந்தன்?

“நான் இங்க வந்து விருந்து சாப்பிடணுமா?”

“ஏன் ஷிவா. என் வீட்டில் சாப்பிட்டால் என்ன?”

“இது உன் வீடு மட்டுமில்லை சீதா.”

அவனது பேச்சிற்கு அவள் பதில் கூறுமுன், “வெல்கம் மிஸ்டர் ஷிவ நந்தன்.”என்ற கம்பீரமான குரலில் மேலே நிமிர்ந்து நோக்கினான் ஷிவா.

அங்குக் கருப்பு நிறத்தில் [Saks Fifth Avenue BOSS Slim-Fit Suit In Linen Blend] சட்டையும், அதற்கு மேல் அதே கருப்பு நிறத்தில் சூட்டும் அணிந்தவனாய் வலதுக் கையைப் பாண்ட் பாக்கெட்டில் விட்டவாறே நின்றவனைப் பார்த்ததில், சத்தியமாக இவனை அரசியல்வாதி என்று கூறவே முடியாது என்று அந்நிமிடம் கூட ஷிவாவின் மனத்தினில் தோன்றியது.

“என்னைப் பார்க்க வந்துட்டு என் வைஃபிடம் விவாதம் பண்ணிட்டு இருக்கீங்க போல இருக்கு."

கூறியவாறே உள்ளத்தினில் காழ்ப்புணர்ச்சியும் கொடும்பகையும் புகையாய் மண்டிக் கிடந்தாலும், அதனை வெளிப்படுத்தாது தன் பரம எதிரியை பார்த்து அழகாய் முறுவலித்தவனாய் விடுவிடுவெனப் படிகளில் இறங்கினான் ஆர்யன்.

அவனது கம்பீரத்தோடும், களையான முகத்தோடும், செல்வாக்கும் இணைந்துப் போனதில் சஹானா போன்ற இளம் மாடல்கள் அவனது மடியில் வீழ்ந்ததில் அதிசயமே இல்லை என்றே தோன்றியது ஷிவாவிற்கும்.

"நான் உங்க வைஃபிடம் விவாதம் பண்ணலை மிஸ்டர் ஆர்யன். என் ஃப்ரெண்ட் சீதாவிடம்."

தான் சிரித்தும் சிரிக்காது உணர்ச்சிகளற்ற முகத்துடன் பேசும் ஷிவாவை நெருங்கிய ஆர்யன்,

"எப்படியோ விவாதம் பண்ணிட்டு இருந்ததா ஒத்துக்கிறீங்க. இட்ஸ் ஒகே.. வாங்க.. என் ஆஃபிஸ் ரூமுக்குப் போய்ப் பேசலாம்.." என்றவாறு தனது அலுவலக அறைக்கு அழைத்துச் சென்றான்.

அதற்குள் ஷிவாவிற்குக் காஃபி கலக்க சீதா சென்றுவிட, அறையினுள் தன் இருக்கையில் அமர்ந்த ஆர்யன் எதிரே இருந்த நாற்காலியை நோக்கி சைகை செய்ய,

"நான் இங்க வந்திருப்பது ஒரு இன்வெஸ்டிகேஷனுக்காகன்னு உங்களுக்குத் தெரியும். ஸோ, இந்தச் சம்பிரதாயங்கள் எல்லாம் வேண்டாம். நேரிடையாவே விஷயத்துக்கு வந்துடுறேன். சஹானாவுக்கும் உங்களுக்கும் இருந்த தொடர்பு எல்லாருக்கும் தெரியும். அது முறிந்துப் போயிடுச்சுன்னும் கேள்விப்பட்டோம். எனிவேய்ஸ், அவளுடைய கொலையைப் பற்றிய விசாரணைகளை நான் தான் மேற்கொண்டிருக்கேன்னு உங்களுக்குத் தெரியும்னு நினைக்கிறேன். பட், அவளுடைய மரணத்துக்கும் உங்களுக்கும் நேரடித் தொடர்பு கிடையாது, ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால் அவளுடைய கொலைக்கு நீங்களும் ஒரு காரணமா இருக்கலாமோன்னு எனக்குச் சந்தேகமா இருக்கு.." என்றான்.

"அதை இப்படி நின்னுட்டே பேசப் போறீங்களா?"

"நீங்க எழுந்து நின்னுட்டு கூடப் பேசலாம்."

அவனது கூற்றில் வாய்விட்டு சிரித்த ஆர்யன் மேஜையின் மீது வைக்கப்பட்டிருந்த, மேற்புறம் கருப்பு நிறமும் அடிப்பாகம் ஆரஞ்சு நிறத்திலும் செய்யப்பட்டிருந்த சிகார் பெட்டியைத் திறந்தவன், அதில் இருந்து சிகாரை எடுத்தவனாய், "Do you mind?" என்றான்.

இல்லை என்பது போல் தலையை மட்டும் அசைத்த ஷிவாவின் கண்களை விநாடிகள் சில கூர்ந்துப் பார்த்தவாறே சிகாரைப் பற்ற வைத்தவனாய் இருக்கையில் இருந்து எழுந்தவன், "எனக்கும் சஹானாவுடைய கொலைக்கும் என்ன தொடர்பு இருக்க முடியுமுன்னு நீங்க நினைக்கிறீங்க?" என்றான்.

"உங்களுக்கும் மாஃபியா க்ரூப் மிர்சா கேங்குக்கும் [mafia group called "Mirza Gang"] எதுவும் சம்பந்தம் இருக்கா மிஸ்டர் ஆர்யன்?"

"நோ.."

"ஆனால் சஹானாவுக்கும் அவங்களுக்கும் இடையில், குறிப்பா கலானி மிர்சாவுக்கும் அவளுக்கும் தொடர்பு இருந்திருக்கு. அது உங்களுக்குத் தெரியுமா?"

"யெஸ்.."

"எப்போல இருந்து?"

"அவள் கொலை செய்யப்படுவதற்கு ஒரு மாசத்துக்கு முன்னாடி இருந்து."

ஒரு பெண்ணுடன் பல மாதங்களாய் இவன் உல்லாசமாய்க் கலவியில் ஈடுபட்டிருக்கின்றான். அவள் இவனை எந்தளவிற்கு மகிழ்ச்சிப்படுத்தி இருக்கக் கூடும்.

ஆனால் அதே பெண் படு கொலை செய்யப்பட்டிருக்கின்றாள். அதுவும் சின்னாபின்னமாய் அவளின் உடல் சிதைக்கப்பட்டுத் தெருவில் குப்பை போல் வீசப்பட்டிருக்கின்றது.

யாரையோ எவரையோ பற்றிப் பேசுவது போல் தெனாவட்டாய் பதலளிப்பவனை அக்கணமே இழுத்துக் கொண்டு போய் நீதிமன்றத்தில் நிறுத்திவிடும் ஆக்ரோஷமும் வெறுப்பும் ஷிவாவின் மனதிற்குள் எழுந்தது.

ஆயினும் போதிய அளவிற்கான சாட்சியங்களும், ஆதாரங்களும் இல்லாமல், அதுவும் அமைச்சர் பதவியில் இருப்பவனின் மீது விரல் நகம் பட்டால் கூடக் கொந்தளிக்கத் துவங்கிவிடும் அரசியல்வட்டாரத்தையும் அவனது தொண்டர்களையும் கொண்டது நமது இந்திய அரசாங்கம் என்ற சூழலில் வேறு வழியின்றிப் பொறுமையைக் கடைப்பிடித்து நின்றான் அந்த இளம் காவல் அதிகாரி.

ஆனால் அமைதியாக நின்று கொண்டிருப்பவனைப் போல் தோற்றம் தந்தாலும், அவனது வலது கை முஷ்டி இறுகியதைக் கண்டு மீண்டும் முறுவலித்த ஆர்யன், "ம்ம்.. சொல்லுங்க வேற எதுவும் கேட்கணுமா?" என்றான்.

"அப்போ நீங்களும் சஹானாவும் பிரிஞ்சதற்குக் காரணம் கலானி மிர்சாவுடன் அவளுக்கு இருந்த தொடர்பு மட்டும் தானா?"

"யெஸ்.."

"அவளைப் பிரிஞ்சதற்குப் பிறகு நீங்க அவளைச் சந்திச்சீங்களா?"

"நோ.."

“சஹானா மூலமாக கலானிக்கு உங்களைப் பற்றிய ஏதோ ஒரு ரகசிய தகவல் போயிருக்கும்னு நான் நினைக்கிறேன். அது என்னன்னு உங்களுக்குத் தெரியுமா?”

"நோ.."

அவனது ஒற்றை வார்த்தை பதில்களில் அதுவரை கடைப்பிடித்திருந்த பொறுமை ஆகாயத்தைத் தொடும் அளவிற்குப் பறக்க ஆரம்பிக்க, அணிந்திருந்த சட்டைக்காலரை இழுத்துவிட்ட ஷிவா தலையைச் சாய்த்து நிமிர்த்தியதைக் கண்டதுமே இளஞ்சிரிப்புடன், பிடித்திருந்த சிகாரை மீண்டும் ஒருமுறை இழுத்துச் சுவாசித்துப் பின் புகையைவிட்ட ஆர்யன்,

"இட்ஸ் ஒகே எதுவானாலும் தயங்காமல் கேளுங்க.." என்றான்.

"அதுக்கும் யெஸ், நோ மட்டும் தான் சொல்லப் போறீங்க, ரைட்?"

"மிஸ்டர்.." என்றவன் சட்டென நிறுத்தி,

"இந்த மிஸ்டர் எல்லாம் வேண்டாம் ஷிவா, பெயர் சொல்லியே கூப்பிடுவோம், ஓகே? எனிவேய்ஸ் நீங்க என்னைச் சந்திக்க வரப் போறீங்கன்னு எனக்குத் தெரிஞ்சதுமே உண்மையில் என் மேல் தவறு இருந்தால் நான் என்னுடைய வழக்கறிஞர்களை இங்க வரவழைச்சிருப்பேன். அவங்களுக்கு முன்னாடித் தான் உங்க விசாரணைகள் நடக்கணும்னு என்னால் ஸ்ட்ராங்கா சொல்லிருக்கவும் முடியும். பட், நான் இப்போ தனியாத்தானே இருக்கேன். இதில் இருந்தே தெரியலை, நிச்சயமா நேரிடையாகவோ மறைமுகமாகவோ இந்தக் கொலைக்கும் எனக்கு எந்தச் சம்பந்தமும் இல்லைன்னு.

அவ கொலை செய்யப்பட்ட கொஞ்ச நாளுக்கு முன்னாடியே என்னைவிட்டு அவளைத் தூக்கி எறிஞ்சிட்டேன் ஷிவா. நம்பிக்கைத் துரோகம் செய்யும் எவரையும் என்னால் மன்னிக்கவும் முடியாது, அதை மறக்கவும் முடியாது. ஆனால் அதுக்காக அவளைக் கொலை செய்யும் அளவிற்குத் தரம் இறங்குவேன்னு நினைச்சிடாதீங்க. அந்தளவுக்கு எல்லாம் அவள் worth [மதிப்பு] இல்லை ஷிவா." என்றான்.

மிகவும் திமிருடன் சிகாரைப் பிடித்துக் கொண்டே தனக்கு ஈடாய் நெடுநெடுவென்ற உயரத்துடன் நிமிர்ந்து நின்றுக் கூறும் ஆர்யனின் கூற்று ஷிவாவிற்குப் பெரும் எரிச்சலைக் கிளப்பியது.

ஆயினும் குற்றவாளிகளின் கண்களை வைத்தே அவர்கள் கூறுவது மெய்யா பொய்யா என்று கண்டுப்பிடித்து விடுபவனுக்கு ஆர்யன் பொய் கூறவில்லை என்பதும் புரிந்தது.

இருந்தாலும் ஆர்யனே அறியாதவண்ணம் அவன் இந்த மரணத்திற்குப் பின்னணியில் இருக்கும் வாய்ப்பும் அதிநிச்சயமாய் இருக்கின்றது என்ற முடிவிற்கு வந்தவன், கொலை நடந்த நேரம் எங்கு இருந்தாய் என்பதைப் போன்ற வழக்கமான கேள்விகளைக் கேட்டு முடித்தவனாய், "கண்டிப்பா மீண்டும் சந்திப்போம் மிஸ்டர் ஆர்யன்.." என்று கூறியவனாய் அறையைவிட்டு வெளியேறினான்.

'மிஸ்டர்' என்று அழுத்தமாய் அவன் கூறியதிலேயே உனக்கும் எனக்கும் இடையில் எந்த வித நட்போ உரிமையோ கிடையாது. நீ ஒரு அமைச்சர், நான் ஒரு காவலதிகாரி என்பதை வலியுறுத்துகிறான் என்று புரிந்து கொண்டான் ஆர்யன்.

அவன் வெளியேறியதும் மீண்டும் தன் இருக்கையில் அமர்ந்து சிகாரின் புகையை உள்ளிழுத்துப் பின் அதனை வெளியே விட்ட ஆர்யனின் எண்ணம் முழுவதிலுமே ஆக்கிரமித்து இருந்தது கலானி மிர்சா.

சஹானாவிற்கும் கலானி மிர்சாவிற்கும் இடையே இருந்த தொடர்பு தெரிந்த அன்றே அவளைத் தூர தள்ளி வைத்தான் ஆர்யன்.

அவள் எவ்வளவோ கெஞ்சியும் சற்றும் இறங்கி வராதவனாய் அதற்குப் பிறகு அவளைச் சந்திப்பதைக் கூட அறவே தவிர்த்திருந்தான்.

அவர்களது பிரிவால் ஏற்பட்ட மன உளைச்சலாலேயே அவள் ஏதோ வெளிநாடு செல்லப் போவதாய்க் கேள்விப்பட்டவன் அதற்குப் பிறகு அவளை அறவே மறந்திருந்தான் என்று கூடச் சொல்லலாம்.

ஆயினும் அவனுக்குமே அவளின் கொடூர மரணம் அதிர்ச்சி அளித்ததுதான். ஆனால் அவன் சஞ்சலம் அடைந்தது வெகு சில நிமிடங்களே.

வழக்கம் போல் அவள் பெயரைக் கூடத் தன் நினைவில் இருந்து துடைத்து எடுத்துவிட்டு மற்ற வேளைகளில் ஈடுபட, அவளது மரணத்தை விசாரணை செய்வதெற்கென்று பிரத்தியேகமாக ஷிவ நந்தன் ஈடுபடுத்தப் பட்டிருக்கின்றான், அதுவும் டிஜிபியின் தனிப்பட்ட உத்தரவினாலேயே என்று அறிந்ததும் ஆர்யனின் பார்வை அவளது வழக்கின் மேல் திரும்பியது.

அவன் எதிர்பார்த்தது போல் ஷிவா அவனை நாடியும் வந்துவிட்டான்.

ஆனால் ஆர்யனே எதிர்பாராத ஒன்று இன்று ஷிவாவின் வாயாலேயே வெளி வந்துவிட்டது.

அது ‘சஹானா மூலமாக கலானிக்கு உங்களைப் பற்றிய ஏதோ ஒரு ரகசிய தகவல் போயிருக்கும்னு நான் நினைக்கிறேன்’ என்று ஷிவா கூறியது.

ஒன்றும் ஒன்றும் இரண்டு என்று கணக்கிடத் துவங்கியவனுக்குத் தான் ஏதோ ஒரு இடத்தில் தவறு செய்கின்றோம் அல்லது எதனையோ தான் மறக்கின்றோம் என்று மட்டும் புரிந்தது.

அது என்ன என்ற தெளிவற்ற நிலையில், தன் அலுவலக அறையைவிட்டு ஷிவா வெளியேறியதும் வெளியே கேட்கும் அரவத்தைக் கூர்ந்துக் கவனித்தவன் சீதாலட்சுமி கொடுத்த காஃபியைக் கூடப் பருகாது மறுத்தவனாய் ஷிவா வெளியேறியதுமே தன் அலைபேசியை எடுத்தான்.

அவன் கேட்ட கேள்விகளுக்கு மறுமுனையில் வந்த தகவலில் ஆர்யனின் அழகிய முகம் விகாரமாக மாறத் துவங்கியது.

அரிமாக்களின் வேட்டை

தொடரும்
 
Last edited:

JLine

Moderator
Staff member
ஃப்ரெண்ட்ஸ்,
நிறையப் பேர் வருண் எப்போ வருவான்னு கேட்டு இருக்கீங்க. இன்னும் 2 அத்தியாயங்களுக்கு வருண் வரமாட்டான். அத்தியாயம் 30-ல் இருந்து வருவான்.
Thanks

JB
 

Vidhushini

New member
ஆர்யன், தனது ரகசிய ஆராய்ச்சி பற்றிய விவரம் மிர்சா சகோதரர்களுத் தெரிஞ்சதுனாலதான், சஹானா கொல்லப்பட்டு இருக்கலாம்-னு இன்னும் யூகிக்கலையா?

ஃபோன்ல பேசியது ஆர்யனின் உளவாளியா? அல்லது வருணா? or the invisible players-ஆ?

Very interesting @JB @JLine sis🔥
 

JLine

Moderator
Staff member
ஆர்யன், தனது ரகசிய ஆராய்ச்சி பற்றிய விவரம் மிர்சா சகோதரர்களுத் தெரிஞ்சதுனாலதான், சஹானா கொல்லப்பட்டு இருக்கலாம்-னு இன்னும் யூகிக்கலையா?

ஃபோன்ல பேசியது ஆர்யனின் உளவாளியா? அல்லது வருணா? or the invisible players-ஆ?

Very interesting @JB @JLine sis🔥
தனது ரகசிய ஆராய்ச்சி பற்றிய விவரம் மிர்சா சகோதரர்களுத் தெரிஞ்சதுனாலதான், சஹானா கொல்லப்பட்டு இருக்கலாம் -அப்படின்னு நீங்க கெஸ் பண்ணிட்டீங்க. Will see :)
 
Ragasiya araichiya irukkalam illaina sahana thozhil la oru share kettu avalaiyum inaikka sonnathagavum irukkalam. Athanala kuda Aryan pirinchirkka vaippirkku. Waiting for the next epi mam.
 
Wow… Shivu… duty calls…
Enekku Aryan mele thappu irukkathu Sahana matter la nu than thonuthu…
Aanalum enekku avanai pidikkala… Seetha romba pawam… 😢😢😢 oru nandri unarchi la poruthu poittu irukka…
 

saru

Member
Sahana matter la Aryan mela tappu ila ok
Ana mirsha brothers ku Ava turuppu tane y kollanum vaipila
Idula veru edo yaro irukanga
Inda aaari engayo edyo vitrukan pakalam
Siva guess pannitane unga visayam edo trinjirukumu
Aryan ku vanda thagsval enna
Y kovam
Seetha nandrikadan hoom
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top