JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம்-5

saaral

Well-known member
அத்தியாயம் - 5

உணவை உட்கொண்டு இருவரும் கட்டிலில் அமர்ந்தனர் அவர்களுக்கான பயனபதிவு இரவு தான் என்பதால் எந்த வித அவசரமும் இல்லாமல் இருந்தனர் .

"அம்மா உங்க கிட்ட மறைக்கணும்னு நானும் அப்பாவும் நினைக்கலை தெரிஞ்சா கஷ்டப்படுவீங்கன்னு அப்பா யோசிச்சாங்க . எனக்கு நீங்களாவது என்னுடன் ரொம்ப நாள் இருக்க வேண்டும் என்ற ஆசை அதான் சொல்லலை " என்று ஆரம்பித்தாள் மதி .

"அம்மா நாலு வருஷம் முன்னாடி நான் சென்னைல எம் பி ஏ படிச்சுக்கிட்டு இருந்தேன் ...கடைசி பரீட்சையின் சமயம் அப்பாவிற்கு ஹார்ட் அட்டாக் வந்துச்சு நியாபகம் இருக்கா ? " கேள்வியாக நிறுத்தினாள் .

"அதை எப்படி மறப்பேன் மதிமா .... அதன் பிறகு ஒரு மாதத்தில் இன்னொரு அட்டாக் வந்து உங்க அப்பா நம்ம ரெண்டு பேரையும் விட்டுட்டு போய்ட்டாங்களே " காதல் கணவன் இந்த பூவுலகில் தன்னை தனித்து விட்டுச்சென்ற வலி அது என்றும் மறையாது என்பதை உணர்ந்தாள் மதி .

"ஹ்ம்ம் ஆமா அம்மா எதனால அட்டாக் வந்துச்சு தெரியுமா நம்ம பூர்வீக இடம் மதுரையில் இருந்ததே அதை ஒரு பெரும் நிறுவனத்தின் அதிபர் கேட்டார் நம்ம அப்பா அதை கொடுக்க ஒத்துக்களை ...அதற்காக எப்படி எல்லாமோ மிரட்டி பார்த்தனர் அப்பா மசியவில்லை ....இறுதியில் என்னை இங்கு தேடிப்பிடித்து ..." சொல்லும் பொழுதே அவளின் தொண்டை அடைத்தது ஆனால் ஒரு சொட்டு நீர் வரவில்லை .

தாய் அறியாத சூலா ...அவளின் தலையை கோதிவிட்டார் அகிலம் "என்னை கண்டுபிடித்து எனது ஹாஸ்டல் அறையில் எனக்கு தெரியாமல் கேமரா வைத்து என்னை என்னை " அவளால் முழுதாக சொல்ல முடியவில்லை .

"மதிமா " அதிர்ச்சியுடன் கத்திவிட்டார் .

"ஆமாம் அம்மா அதை வைத்து அப்பாவை மிரட்டி பார்த்தனர் ...அப்பா பதறி துடித்து என்னிடம் கூறினார் அந்த காமெராவை கண்டுபிடித்து போலீஸில் புகார் செய்து விட்டேன் ....இருந்தும் அந்த கயவர்களிடம் சென்ற ஓரிரு புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றிவிட்டனர் இது தெரியவந்தவுடன் அப்பா ஹார்ட் அட்டாக் வந்து படுத்துவிட்டார் . அப்பறம் எப்படியாவது என்னை கரை சேர்க்க அவர் எண்ணினார் அப்ப அதை பயன்படுத்தி உன் அண்ணா வீட்டில் இருந்து வந்தனர் ."

அகிலம் கண்களை அகல விரித்தார் .....தனக்கு தெரியாமல் என்ன எல்லாம் நடந்துவிட்டது அழுகை வந்தாலும் அடக்கிக்கொண்டார் , மகள் வருந்துவாளே !! .."உன் அண்ணி எனது புகைப்படத்தை இணையத்தில் வந்திருப்பதாக கூறி நமது முழுச்சொத்தையும் அவர் பெயரில் மாற்றி தர பேரம் பேசினார் அப்பா வெறுத்துவிட்டார் ....அந்த இடத்தால் எனக்கு பிரச்சனை என்று கருதி அதை விற்றுவிட்டு பணத்தை உன் பெயரில் வங்கியில் போட்டார் . பின் அவர் வருத்தத்தில் இறைவனடி சேர்ந்தார் " எல்லாம் சொல்லி முடித்தவுடன் தனது தந்தையின் நினைவில் உடைந்து விடுவோமோ என்று தன்னை கட்டுப்படுத்தினாள் மதி . இவள் வருந்தினால் அம்மா தாங்க மாட்டாரே ....

இருவரும் மற்றவருக்காக தங்களின் உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தனர் .

"அம்மா அப்பா கடைசியா என் அகிலம் உன் பொறுப்பு என்று தான் கூறினார் தெரியுமா ..." குரல் கமர கூறினாள் மதி . அதற்குமேல் அகிலத்தால் முடியவில்லை ஓவென்று கதறித்துடித்தார் . மதி அவரை தோல் தங்கினாள் . தாயாக மாரி அரவணைத்தாள் .

...............................................................

இங்கு சென்னையில் கௌஷிகால் ஒரு வேலையிலும் கவனம் செலுத்த முடியவில்லை . அவனின் கண்களின் முன் கௌசல்யாவும் ,வான்மதியும் மட்டுமே வந்து சென்றனர் . அவன் இத்துணை காலம் ஆண் மற்றும் தான் என்னும் கர்வத்தில் இருந்தவன் கடந்த சில நாட்களாக மற்றவர்களின் பார்வையில் இருந்தும் பார்க்க தொடங்கினான் .(உனக்கு வந்தா ரத்தம் அதே அடுத்தவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னியா ? )

வீட்டில் இனியாவின் உதவியுடன் கௌசல்யா கொஞ்சம் கொஞ்சமாக தேறி வந்தாள் . இனியாவின் வருகை தினப்படியில் இருந்து வாரம் ஒரு முறை என்னும் ரீதியில் குறைந்தது . இனியாவை அவளின் மாமன் மகன் சரகேஷ் வந்து கூட்டி செல்வான் .

கௌசல்யா அழகு பெண் . வயதிற்கேர்த்த துறுதுறுப்பு , அழகு அறிவு அனைத்தும் பெற்று விளங்கியவள் . அவளை சரகேஷ் பார்க்கும் பார்வையை கண்டுகொண்ட இனியா "டேய் மாமா மகனே என் பேஷன்டையே சைட் அடிக்கிறாயா கொன்றுவேன் " ஒற்றைவிரல் நீட்டி மிரட்டினாள் .

"என்ன பண்றது அத்தை பெத்த ரத்தினமே .....என் அத்தை அழகான பொண்ணை பெத்துவச்சிருந்தா இன்னேரம் நான் ஏன் அடுத்த வீட்டு பெண்ணை பார்க்க போகிறேன் " அவனும் துள்ளலுடன் காரை செலுத்திக்கொண்டே பதில் அளித்தான் .

"அடிங்கு ......நான் அழகா இல்லை ஹான் .....அப்பறம் ஏன்டா போன வாரம் அந்த தேவாங்கு தினேஷ் என்னை பார்த்தான்னு வெளுத்து கட்டின ....." புருவம் உயற்றி வினவினாள் .

"ஹாஹாஹாஹா , ஹீஹீஹீஹீ , ஏ ஏ ஏஏஏ " இனியா சொல்வதை கேட்டு வயிற்றை பிடித்துக்கொண்டு சிரித்தான் சரகேஷ் .

"டேய் குரங்கே எதுக்குடா சிரிக்கிற " எரிச்சல் மண்டிக்கிடந்தது இனியாவின் கேள்வியில் .

"ஹேயஹெய் ....அவன் உன்ன பார்த்ததற்கு அடிச்சேன் நினைச்சியா ....உனக்கு போயும் போயும் இவ்ளோதான் ரசனையாங்கிற கடுப்பில அடிச்சேன் ....." அவன் சொல்லிக்கொண்டே சென்றான் அவள் முறைத்துக்கொண்டு சென்றாள் .

"பின்ன உன் பக்கத்தில் அந்த ரீனா எவ்ளோ அழகா நின்னுகிட்டு இருந்தா அவளை விட்டு உன்னை பார்க்கிற மடையன மண்டைலயே நாலு சாத்து சாத்தினேன் " சிரித்துக்கொண்டே சொல்லும் மாமன் மகனை எதை வைத்து தாக்கலாம் என்று பெரும் யோசனைக்கு ஆளானாள் இனியா .

கௌஷிக் சதாசிவத்திடம் சொல்லி வான்மதியை பற்றிய அனைத்து செய்திகளையும் சேகரிக்கச்செய்தான் .

"தம்பி ,உங்க கிட்ட கொஞ்சம் பேசலாமா " சதாசிவம் அவன் முகம் நோக்கி கேட்டார் .

"சதாசிவம் இப்ப ஒரு பிரண்ட் வராங்க அதுக்கு அப்பறம் பேசலாமா "

"சரி தம்பி " என்று அதே அறையின் ஓரத்தில் இருக்கும் அவரின் இருக்கைக்கு சென்றார் .

சற்று நேரத்தில் இனியா சர்கேஷுடன் உள்ளே நுழைந்தாள் . அவளை முகத்தில் நிறைந்த புன்னகையுடன் வரவேற்றான் கௌஷிக் . "வா இனியா ...எப்படி இருக்க ....வாங்க " இனியாவிடம் ஆரம்பித்து சர்கேஷிடம் முடித்தான் .

"எப்படி இருக்க கௌஷிக் " இது இனியா .

"குட் ....."

"கௌஷிக் திஸ் இஸ் சர்கேஷ் மை கசின் " புன்னகையுடன் இருவருக்கும் அறிமுகம் செய்துவைத்தாள் இனியா . புன்னகையுடன் இருவரும் கை குலுக்கி கொண்டனர் .

"ஹாய் கௌஷிக் ஆம் சர்கேஷ் ..."

"ஹாய் ப்ளீஸ் சீட் டௌன் " என்று கூறி சதாசிவத்தின் பக்கம் பார்வையை திருப்பி "சதாசிவம் மூன்று காபீ " என்று அவர்களுக்கு வேண்டியவற்றை கேட்டு கூறினான் .

"அப்பறம் இனியா சொல்லு " எந்த வித முகமனும் இல்லாமல் நேராக கேட்டான் கௌஷிக் .

"வெள் கௌஷிக் ...திஸ் இஸ் சர்கேஷ் இவன வச்சுக்கிட்டே பேசுறேன்னு நினைக்காத ...ஒரு அவசியம் இருக்கு அதான் இவனையும் இங்கு கூட்டிட்டு வந்தேன் " இனியாவும் நேராக பேசினாள் .

கௌஷிக் புருவங்கள் சுருங்க சர்கேஷை பார்த்தான் , சர்கேஷுமே குழப்பத்துடன் பார்த்தான் 'இவ என்ன சொல்றா ' என்று .

"கௌஷிக் நான் சொல்லிருக்கேன்ல என் அப்பா சிங்கப்பூர்ல ஒர்க் பன்னிட்டு இருக்கப்ப நானும் அம்மாவும் மாமாவின் குடும்பத்துடன் தான் இருந்தோம் ....மாமா தான் எங்களுக்கு எல்லாம் எம் என் ஷோரூம் ஓனர் அவரின் ஒரே மகன் தான் சர்கேஷ் ....இதெல்லாம் எதுக்குடா இவ சொல்லறான்னு நீ யோசிக்கலாம் ....ஏன் சொல்றேன்னா வருங்கால சம்பந்தி வீடுகளை முறையே அறிமுகப்படுத்தி வைப்பது என் கடமை அதான் " பெரிய உரையை நிகழ்த்தி இருவரையும் கள்ளப்பார்வையுடன் பார்த்துக்கொண்டே தண்ணீரை எடுத்து பருகினாள் .

கௌஷிக் இன்னும் குழப்பம் மாறா முகத்துடன் அவளை நோக்கினான் என்றால் , சர்கேஷ் அவளை கொள்ளும் வெறியுடன் நோக்கினான் 'க்ராதகி ஏதோ நேந்துவிட்ட ஆட்டை கூட்டிட்டு போறமாரி கூப்பிடறாளேனு அப்பவே நினச்சேன் , பக்கி பக்காவா போட்டுற்றுச்சே ' அப்படியே பார்வையை திருப்பி கௌஷிக்கை பார்த்தான் .

கௌஷிக் இந்த கால அவகாசத்தில் மண்டையில் மணி அடிக்க இனியா சொல்லவருவதை புரிந்துகொண்டு சர்கேஷை ஆராய்ச்சியாக பார்த்தான் . 'செத்தோம் .....நம்ம மைண்ட்ல இருக்கிறது இந்த பக்கிக்கு எப்படி தெரிஞ்சுது ' யோசனையாக இனியாவை நோக்கினான் சர்கேஷ் .

கள்ளச்சிரிப்புடன் "டேய் மாமா மகனே மொச புடிக்கிற எதையோ மூஞ்சியை பார்த்தா தெரியுமாமே .....நீ கௌசியை பார்க்கிறதே சொல்லிடுச்சு யூ லவ் ஹெர்னு " சர்கேஷின் காதில் மெதுவாக கூறினாள் அது கௌஷிக்கும் கேட்டுவைத்தது .

புன்னகையுடன் "சோ சர்கேஷ் கௌசியை விரும்பறார்னு உன்கிட்ட கூட சொல்லல மேடம் உங்க வேலையை நீங்க இங்கயும் கட்டியாச்சு " கௌஷிகின் முகத்தில் சிரிப்பை பார்த்த இருவரும் நிம்மதியடைந்தனர் .

சதாசிவத்திற்கு நடந்த அணைத்தும் தெரியும் ஆகையால் சர்கேஷை பார்வையிலே எடை போட்டார் .

"சாரி மிஸ்டர் கௌஷிக் இந்த பக்கி இப்படி போட்டு கொடுக்கும்னு யோசிக்கல இட்ஸ் ஜஸ்ட் எ விஷ் ...வாட் எவர் கௌசியின் முடிவு இதில் ரொம்ப முக்கியம் அதனால் தான் அமைதியாக யாரிடமும் சொல்லவில்லை " சர்கேஷ் எந்த வித பூசல்களும் இல்லாமல் கௌசியின் மனதை அறிய அமைதி காப்பதை சொல்லிய விதம் கௌஷிக்கை ஈர்த்தது .

"உங்களுக்கு கௌசியின் நிலைமை " என்று இழுத்தான் கௌஷிக் .

"மிஸ்டர் கௌஷிக் " என்று ஆரம்பித்த சர்கேஷை தடுத்து "ஜஸ்ட் கௌஷிக் போதுமே லெட்ஸ் பி பிரண்ட்ஸ் " என்றான் .

"சூர் நீயும் என்னை தோழனை கூப்பிடுவதை போல் கூப்பிடலாமே " சர்கேஷிடம் தென்பட்ட எதார்த்தம் அவனை சர்கேஷின் பக்கம் முழுதாக சாய்த்தது . புன்னகையுடன் அவன் கூறியதை ஆமோதித்தான் கௌஷிக் .

"கௌஷிக் எனக்கு எல்லாம் தெரியும் இட்ஸ் நத்திங் ....இது ஒரு விஷயமே இல்லை நிச்சயம் பெண் என்ற உருவ வடிவமுடையவர்கள் இப்படிதான் இருப்பாங்க இது இயற்கை ....என்னடா இவன் ஓபன் ஹா பேசுறானேன்னு யோசிக்காதிங்க ....பல பெண்கள் இந்த மாதிரி தவறு அவர்கள் அறியாமல் நடந்தால் தங்களையே வருத்திக்கொள்கிறார்கள் இல்லை கயவர்களின் கட்டளைக்கு இணங்கி பிரச்சனையில் மாட்டிக்கொள்கிறார்கள் ....என்னை பொறுத்தவரை இந்த மாதிரி தவறு நிகழக்கூடாது என்றால் எதிர்த்து நின்று அதனால் என்ன என்று ஒரு பார்வை பார்த்தாலே போதும் இந்த மாதிரி செய்ய எவனும் துணிந்து வரமாட்டான் " சர்கேஷ் சொன்ன விஷயம் நூற்றுக்கு நூறு உண்மை ஆனால் கௌஷிக்கின் முகத்தில் அந்த அரை இன்றும் விழுவது போன்ற உணர்வு .

"நீங்கள் சொல்வது சத்தியமான உண்மை சர்கேஷ் " எங்கோ பார்த்துக்கொண்டு இறுக்கமான குரலில் கூறியவனை பார்த்த சதாசிவம் மனதில் சற்று நிம்மதி அடைந்தார் . இனியா மற்றும் சர்கேஷ் அவன் தங்கையின் நிலையை எண்ணி வருந்துகிறான் என்று விட்டனர் .

"காலம் இருக்கு கௌஷிக் , கௌசல்யாவிற்கு சற்று கால அவகாசம் வேண்டும் நான் கொஞ்சம் கொஞ்சமாக அவளை மாற்றுகிறேன் என்னை நம்புங்க " சர்கேஷ் உறுதியளித்தான் .

கௌஷிக் பெருமூச்சுடன் "நல்லது நடந்தால் நிச்சயம் மகிழ்ச்சிகொள்ளும் முதல் ஆள் நானாக தான் இருப்பேன் சர்கேஷ் "
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top