JLine Tamil Novels & Stories

Dear Users, Please register your account again if you have trouble to login or You can also email to jbtamil18@gmail.com to register again.

JLine Bookstore Online

அத்தியாயம் -2

saaral

Well-known member
அத்தியாயம்-2

கௌசல்யா வீட்டிற்கு வந்து இருநாட்கள் ஆகிவிட்டது . எல்லா நேரமும் அழுகையுடன் இருக்கும் அவளை பார்த்து அவன் கடுப்பின் உச்சிக்கே சென்றான் . ஒரு மதியநேரம் கௌசல்யா அறையினுள் இருந்த சமயம் உள்ளே நுழைந்த கௌஷிக் அவளின் முன் சென்று நின்றான் .

"அண்ணா " தீனமாக ஒலித்தது அவளின் குரல் . அதே கண்ணீர் தேக்கம் ஆனால் அவளுக்கும் இவளுக்குமான வித்யாசம்.....! தயிரியம் . அவள் எவ்ளோ தயிரியமாக இதை எதிர்கொண்டாள் . தனது தங்கைக்கும் தயிரியம் அவசியம் என்று எண்ணினான் அவன் .

"கௌசி என்கூட கொஞ்சம் வெளிய வரியா " மென்மையாக தலையை தடவி விட்டு கேட்டான் .

"அண்ணா வேண்டாம் ப்ளீஸ் நான் ரூம்லயே இருக்கேனே " பார்வையிலும் குரலிலும் இறைஞ்சலுடன் கேட்டாள் .

"கௌசி லுக் இட்ஸ் நத்திங் ஓகே ரொம்ப மனதை போட்டு குழப்பிக்காத , அம்மா உன்னை பார்த்து வருத்தப்படறாங்க . நான் சொல்றதை கேள் யூ ஆர் கமிங் வித் மீ நொவ் " என்று கூறி அவளை கிளம்ப சொல்லி வலுக்கட்டாயமாக வெளியே அழைத்து வந்தான் .

கேள்வியாக பார்த்த ஸ்ருதியை நோக்கி சென்று "அம்மா எதை நினச்சும் கவலை படாதீங்க , சரியா ....நான் இருக்கேன் நான் பார்த்துப்பேன் . இப்ப கௌசியை ரிலாக்ஸா வெளிய கூட்டிட்டு போய்ட்டு வரேன் " என்று கூறி விடைபெற்றான் கௌஷிக் .

காரில் இருவரும் கிழக்கு கடற்கரை சாலையில் சென்றனர் . "அப்பறம் கௌசி எப்ப காலேஜ் போக போற "

"அண்ணா " என்று அவனின் முகம் நோக்கி தயங்கினாள் .

"என்னமா ...எப்ப போறன்னு தான கேட்டேன் ...எதுக்கு இப்படி தயங்குற ...இல்லை இனிமே படிப்புக்கு முழுக்கு போட போறியா ? " கேள்வியாக நிறுத்தினான் .

"அண்ணா அது நான் எப்படி ....ப்ளீஸ் அண்ணா யாரையும் பார்க்கிற தயிரியம் எனக்கு இல்லை " கண்ணீருடன் கூறிய தங்கையை பார்த்து தனது அணுகுமுறையை மாற்றினான் .

"கௌசி இப்ப என்ன ஆகிடுச்சுனு இப்படி அழுது வடிஞ்சிட்டு இருக்க ....லுக் அந்த ரக்ஷன் எல்லாத்தையும் கொடுத்துட்டு ஓடிட்டான் ...அதை நினச்சு இனி தயங்குவதில் அர்த்தமே இல்லை அண்ட் மோரோவர் அந்த வீடியோ யார்கைளயும் கிடைக்காத அளவுக்கு எக்ஸ்பெர்ட் வச்சு அழிச்சாச்சு " நடந்தவைகளை அழுத்தமாக கூறினான் .

"அண்ணா ப்ளீஸ் ...என்னால ...என்னால யாரையும் பேஸ் பணமுடியும்னு தோணல ...எனைவிட்டுடு ..." முகத்தை மூடிக்கொண்டு கதறினாள் .

"கௌசி இங்க பார் ...என்னை பார் சொல்றேன்ல " அதட்டினான் . அது சற்றே வேலை செய்தது அவளின் கண்ணீர் கட்டுக்குள் வந்தது . வண்டியை ஓரமாக நிறுத்தி பேச தொடங்கினான் கௌஷிக் .

"கௌசி இங்க பார் இட்ஸ் நத்திங் ... அப்படி உன்னை யாராச்சும் பார்த்தாங்கனு நீயே உன்னை ஒரு கூட்டிற்குள் அடைத்து வச்சுக்குவியா ? ...இதெல்லாம் நிச்சயமாக ஒன்றுமே இல்லை .... இதனால் கற்பு போய் விட்டது என்று யாரேனும் சொல்ல முடியுமா ....அண்ட் ஒன் திங் நல்லா மண்டைல ஏத்திக்கோ ஆண் என்றால் இப்படி தான் இருப்பான் என்று இருக்கு அதே போல் பெண் என்று பிறந்த அனைவரும் இப்படிதான் இருப்பார்கள் இருக்கும் ....இதற்கெல்லாம் அதும் உனக்கே தெரியாமல் நடந்தவைகளை நினைத்து உன்னையே வதைத்துக்கொள்வது என்பது முட்டாள் தனத்தின் உச்சம் ...." இப்படி பலவாறாக பேசி அவளை ஒரு அண்ணனாக தேற்றினான் .

அவள் அதில் இருந்து மீண்டு வர தனது தோழியும் மனநல மருத்துவருமான இனியாவை தினமும் வீட்டிற்கு வரவழைத்தான் . கொஞ்சம் கொஞ்சமாக கௌசல்யாவை அந்த மன அழுத்தத்தில் இருந்து மீட்டு இயல்பு வாழ்க்கைக்கு திருப்ப முயற்சித்து கொண்டு இருந்தனர் .

...................................

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் அந்த கிறித்துவ கல்லூரியில் மாணவிகளின் கூச்சல் அரங்கையே நிறைத்தது . அங்கு தங்களின் பிடித்த ஆசிரியர் சொல்லி தந்த நடனம் மேடையில் சக்கைபோடு போட்டது . வான்மதி ஆசிரியர் என்றால் அனைவருக்கும் அத்துணை மகிழ்ச்சி ஓராண்டிற்கு முன் தான் பணிபுரிய தொடங்கினார் என்று கூறினால் நம்ப இயலாது மாணவிகளிடம் பிரபலமான விரிவுரையாளர் .

நான்கு ஆண்டுகளுக்கு முன் திக்கற்று வந்த வான்மதியை இருகரம் நீட்டி வரவேற்றார் சிஸ்டர் நிர்மலா . இந்த கிறித்துவ கல்லூரியின் தலைமை ஆசிரியர் . தனது தாயுடன் கண்ணீருடன் கொடைக்கானல் வந்த வான்மதி என்ன செய்வது ஏது செய்வது என்று தெரியாமல் சுற்றி திரிந்தாள் . வழியில் தென்பட்ட தேவாலயத்தினுள் நுழைந்து அமைதியாக கண்மூடி அமர்ந்து ஏசு நாதரை கண்சிமிட்டாமல் பார்த்தாள் .

அன்று அங்கு வந்த சிஸ்டர் நிர்மலா இவளின் நிலை பார்த்து ஏதோ தோன்ற அருகினில் சென்று அமர்ந்து பேச்சு கொடுத்தார் . அவளையும் பேச வைத்து அனைத்தையும் தெரிந்துகொண்டவர் ஒருவரிடம் கூறி மூன்றடுகளாக ஒரு இடத்தில் பகுதி நேர வேலைக்கு சேர்த்துவிட்டு மேற்படிப்பு படிக்கவும் ஊக்கம் கொடுத்தார் .

அன்றில் இருந்து சிஸ்டர் நிர்மலா என்றால் அவளின் மனதில் சிறப்பான இடம் தான் . அவர் சொல்லிவிட்டால் மறுபேச்சு பேசாமல் கேட்டுக்கொள்வாள் வான்மதி . மூன்றாண்டுகள் படித்தவுடன் அவர் இருக்கும் கல்லூரி வளாகத்தினுள் விரிவுரையாளராக சேர்த்துக்கொண்டார் .

சிஸ்டர் நிர்மலாவிற்கும் இந்த பெண்ணின் தயிரியம் துணிச்சல் கண்டு பெரும் சந்தோசமே . வெளியே தயிரியத்தை காட்டிக்கொண்டாலும் அவளுள் இருக்கும் வலியும் அவளின் மனதை போட்டு வதைக்க தான் செய்கிறது . அதை வான்மதியால் யாரிடமும் கூறமுடியவில்லை . முகத்தினில் புன்னகை என்னும் முகமூடி அணிய கற்றுக்கொண்டாள் .

"மேம் சூப்பர் டான்ஸ் ...பொண்ணுங்கள் எல்லாரும் சும்மா எழுந்து நின்னு கைதட்டறாங்க " சக ஆசிரியர் புகழ்வதை ஒரு புன்னகையுடன் ஏற்றுக்கொண்டாள் வான்மதி .

இன்று அன்னை தந்தையின் பிறந்தநாளுக்காக கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று கூறியது நினைவிற்கு வந்தது . சென்று சிஸ்டரிடம் அனுமதி பெற்றுக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தை கிளப்பிச் சென்றாள் .

வான்மதி சராசரி தமிழ் பெண்ணின் உயரம் கொடி இடையாள் என்று கூற இயலாது சற்றே பூசிய உடல் . ஆனால் அவளை குண்டு என்றும் சேர்க்க இயலாது அவளின் உயரத்துக்கு ஏற்ற உடல் அமைப்பு . தோள்பட்டை தாண்டி ஒரு இன்ச் வெட்டப்பட்ட அழகிய கூந்தல் . இருபக்கத்திலும் சிறு கற்றை முடி எடுத்து நடுவில் ஒரு கிளிப் கொண்டு அடக்கி இருந்தாள் . கோதுமை நிறம் . இந்த டஸ்க் நிறம் என்று சொல்ல கூடிய நிறம் . கூர்மையான பார்வை எடுப்பான நாசி . நெற்றியின் நடுவில் கோபுர வடிவில் சிறு பொட்டு . இவ்ளோதான் இவள் . நிச்சயம் கல்யாணம் செய்ய நினைக்கும் ஆண் இவளை பார்த்தால் சம்மதம் சொல்லும் அழகு . செய்யும் பணிக்கு ஏற்ப அழகாக சேலையை மடிப்பு கலையாமல் கட்டிக்கொண்டு சென்றுவருபவள் .

மலைப்பாதையினுள் லாவகமாக வண்டியை செலுத்தி வீட்டிற்கு வந்து சேர்ந்தாள் வான்மதி . அங்கு வீட்டில் கூடத்தில் அகிலம் அவளின் அன்னை இவளின் வருகைக்காக காத்துகொண்டு இருந்தார் . மகளின் வண்டியின் ஓசை கேட்கவும் முகத்தினில் தோன்றிய மகிழ்ச்சியுடன் எழுந்து சென்று காபி கலக்க துடங்கினார் .

அது ஒரு ஒற்றை படுக்கை அறை கொண்ட சிறிய வீடு . நேர்கோட்டில் கூடம் அதற்கு அடுத்தது படுக்கை அறை . இடப்புறத்தில் சமையல் அறை என்ற சிரியவீடு . சிஸ்டர் நிர்மலா அவர்களின் உதவியுடன் வங்கி கடன் வாங்கி காட்டினாள் அவள் .

"அம்மா டிரஸ் மாத்திட்டு வரேன் , கிளம்பலாம் " என்று கூறிக்கொண்டே படுக்கை அரை நோக்கி சென்றாள் .

காபி கலந்துகொண்டு இருந்த அகிலம் காபியை எடுத்துக்கொண்டு கூடத்திற்கு வந்து அங்கு போடப்பட்டிருந்த சிறிய நீல் விரிகையில் அமர்ந்தார் . உள்ளே சென்ற வான்மதி உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தாள் .

மகளை அழகான சுடிதாரில் பார்த்த அந்தத்தாயின் கண்கள் நிறைந்தன "அழகா இருக்க டா மதி " தலைகோதி கூறினார் . புன்னகையுடன் அருகினில் அமர்ந்து காபி பருகிவிட்டு எழுந்து "அம்மா கிளம்பலாமா " என்றாள் .

அதன் பிறகு இருவரும் அருகினில் இருக்கும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு வந்தனர் . வீட்டிற்கு வந்தவுடன் வான்மதி இரவிற்கு கோதுமை தோசை சுட்டு தக்காளி சட்னி அரைத்து சாப்பிட அமர்ந்தாள் .

சாப்பிட்டுக்கொண்டே இருந்த அகிலம் மகளின் முகத்தை தயக்கத்துடன் நோக்கினார் "அம்மா இப்ப உங்களுக்கு என்ன கேக்கணும் " அவரின் தயக்கம் புரிந்து கேட்டாள் அவள் .

அவரும் தயங்கி கொண்டே "அண்ணன் மகன் சிவாவிற்கு கல்யாணம் மதி " என்றார்

"தெரியும் அம்மா பத்திரிகை பார்த்தேன் " பிடிகொடுக்காமல் பேசினாள் .

"அதுக்கு கண்டிப்பா வரணும் சொன்னாங்க அண்ணாவும் அண்ணியும் " அதே தயக்கம்

"......." அவளின் கை உண்ணும் வேலையை நிறுத்தியது .

"மதி சிவாவை உன்ன கட்டிக்க கேட்டாங்க நீ தான் என்ன எல்லாமோ சொல்லி வேண்டாம்னு சொல்லிட்ட ...அவன் கல்யாணத்திற்காகவாது சென்று வரலாமே " கெஞ்சலுடன் கேட்டார் .

அவரின் கெஞ்சல் பொறுக்காமல் "நீங்க போய்ட்டு வாங்க அம்மா " என்று கூறி கை கழுவ எழுந்து சென்றாள் .

"மதி ப்ளீஸ் மா எனக்காக என்கூட நீயும் வாயேன் நாலு கல்யாணத்துக்கு விசேஷத்துக்கு போனா தானே உன்னை நாலு பேர் பார்ப்பாங்க " கல்யாண வீட்டில் தனது மகளுக்கும் நல்லது நடக்கும் என்று எண்ணிய அந்த சராசரி தாயின் எண்ணங்களை நிர்தாட்சண்யம் இல்லாமல் மறுத்தாள்
 
Buy TANJORE PAINTING @ ETSY.COM
Top